பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு உணரலாம். நக்கீரதேவர் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் திருமறத்தில், கானத் தலைவன் தன்மை: கண்ணுதல் வானத் தலைவன் மலைமகள் பங்கன் எண்ணரும் பெருமை இமையவர். இறைஞ்சும் புண்ணிய பாதப் பொற்பார் மலரினை தாய்க்கண் கன்றெனச் சென்று கண்டல்லது வாய்க்கிடும் உண்டி வழக்கறியானே. " என்று பாடுகிறார். ஆகம பூசை இயற்றும் சிவகோசரியார் கண்ணப்பர் படைத்த ஊன் முதலிய அனுசிதத்தைக் கண்டு மனம் வருந்திக் காளத்தி நாதரிடம், ஈங்கொரு வேடுவன்..... நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித் தொடு செருப்படியால் நீக்கி, வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன் தலை தங்கிய சருகு இலை உதிர்த்து, ஒர் இறைச்சியை நின்திருக் கோயிலில் இட்டுப் போமது என்றும் உன் தனக்கு இனிதே: "......... என்று முறையிட்டதாகவும் பாடுகிறார் இவர் கூறும் முறையில் கண்ணப்பர் அன்றாடம் குடுமித் தேவரை வழிபட்ட பின்னரே உணவு உண்டார் என்றாகிறது. இரண்டாம் பகுதியில் இவர் கூறுவதன்படி பார்த்தால் கண்ணப்பர் செய்தவை அனைத்தையும் சிவகோசரியார் அறிந்திருந்தார் என்றும் ஆகிறது. கண்ணப்பர் பற்றிச் சேக்கிழார் கருத்தை முன்னர் விரிவாகக் கண்டோம். அத்தகைய ஒரு கருதுகோளை நக்கீரதேவர் என்ற இவர் கனவிலும் பெற முடியாது. எனவே இவர் தம் கற்பனை உதவி கொண்டு பாடிச் சென்றார். - இதே போல அந்தாதியில் நம்பியும் தாம் அறிந்தவற்றைப் பாடிப் போனார். பின்னர் வந்த சேக்கிழார் இவர்களிலிருந்து மாறுபடாமற் பாடினாரென்று கூறுதல் பொருத்தமற்ற கூற்றமாகும். பொய்யடிமை இல்லாத புலவர் யார்? இந்த அமைதிகள் ஒருபுறம் இருக்க, முதல்நூல், வழிநூல் என்பவை. எந்த அளவு பின் வருபவர்க்கு இடையூறாகவும் அமையும் என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டைக் காணலாம். இன்றளவும்