பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 65 3 யாராலும் விடை கூற முடியாத பகுதியாகும் இது. 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்ற ஓர் அடி திருத்தொண்டத் தொகையின் ஏழாவது பாடலின் முதலடியாகும். இந்தப் பாடலில் இந்த ஒர் அடி தவிர, புகழ்ச்சோழர், நரசிங்க முனையரையர், அதிபத்தர், கலிக்கம்பர், கலியர், சத்தி, ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பெயர்களே தொடர்கின்றன. அடுத்த எட்டாவது பாடலும் ஒன்பதாவது பாடலும், தனித்தனி அடியார்களையே குறிப்பிட்டுச் செல்கின்றன. பத்தாவது பாடல் ஒன்று மட்டுமே தொகையடியார்கள் என்பவர்களைக் குறிக் கின்றது. பத்தராய்ப் பணிவார்கள் 1. 2. பரமனையே பாடுவார் 3. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் 4. திருவாரூர்ப் பிறந்தார் 5. முப்போதும் திருமேனி தீண்டுவார் 6. முழு நீறுபூசிய முனிவர் 7. அப்பாலும் அடிசார்ந்தார் என்ற இத் தொகுதிகளுடன் 8. தில்லைவாழ் அந்தணர்கள் என இறைவன் அடியெடுத்துக் கொடுத்த அடியில் உள்ள தொடரும் சேர்த்து எட்டுவகைத் தொகை யடியார் கூறப் பெறுகின்றனர். - - தனியடியார்கள் 63 பேர் என்றும் தொகையடியார்கள் 9 கூட்டத்தார் என்றும். எப்பொழுது யாரால் எண்ணிக்கை தந்து கூறப் பெற்றதென்று வரையறுத்துக் கூற இயலவில்லை. சுந்தரர் தம் தொகையில் எண் கொடுத்தோ, மொத்தம் இத்துணைப் பேர் என்றோ கூறவில்லை. எனவே இவருக்கு அடுத்தபடியாக இந்தத் தொகையை ஓரளவு விரித்துப் பாடினவர் நம்பியே யாவார். இவர் வரலாற்று நுணுக்கம் அறிந்தவர் என்று கூற எவ்விதச் சான்றும் இல்லை. இவர் தாம் விரித்துக் கூறியவற்றுள் தவறு செய்திருந் தால் அதனைத் திருத்திக் கொள்ள வழியே இல்லை. சுந்தரரைப் போன்றோ, சேக்கிழாரைப் போன்றேர் இறைவன் அடியெடுத்துக் கொடுத்தமையின் அந்தத் திருவருட் குறிப்பில் நின்று இவர் பாடினார் என்று கூறவும் சான்று இல்லை. இன்னுங் கூற வேண்டு மாயின் இவர் இராசராசன் காலத்தவரல்லர். அவனுக்கும் முற் பட்டவர் என்ற கருத்தும் அறிஞர் வெள்ளைவாரணனார் போன்றாரிடை நிலவி வருகின்றது. இந்த நிலையில் தனியடியார்