பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 5 4 பெரியபுராணம் - ஒர் ஆய்வு அறுபத்து மூவர் என்ற வழக்கு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது; எனவே அதனைமாற்றிக் கூற நமக்கு உரிமையில்லை என்ற வாதம் வலியிழந்து விடுகிறது. இவர்கள் சங்கப்புலவர்கள் என்று நம்பி பாடிவிட்டார் தொகையை விரித்துப் பாடிய நம்பிகள் 'பொய்யடிமை இல்லாத புலவர் என்ற தொடர் முன்னும் பின்னும் தனியடி யாரைக் கூறும் பட்டியலில் நடுவே இடம் பெற்றுள்ளதே என்றும் பாராமல், 'தரணியில் பொய்ம்மை இல்லாத் தமிழ்ச் சங்கமதில் கபிலர் பரணர் நக்கீரர் முதல் நாற்பத்து ஒன்பது பல்புலவோர் அருள் நமக்கு ஈயும் திரு ஆலவாய் அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவிபல பாடும்புலவர்களே! " என்று பாடிச் சென்றுவிட்டார். இவ்வளவு விரிவாகச் சங்கப் புலவர்களுள் பலர் பெயரையும் அவர்கள் நாற்பத்து ஒன்பதின்மர் என்ற தொகையும் கூறிவிடுகிறார். நாற்பத்து ஒன்பது என்று தொகைக் கணக்குக் கூறிய பிறகு பல்புலவோர் என்றும் பாடுவது வியப்பாக உள்ளது. 1. நாற்பத்து ஒன்பதின்மராகிய பல புலவர்கள் என்று பொருள் கூறுவதா? அன்றி - 2. நாற்பத்து ஒன்பதின்மரும் இன்னும் பல புலவர்களும் என்று பொருள் காண்பதா? என்பதில் இன்றும் குழப்பம் உண்டு. - முனைவர் இராசமாணிக்கனார் முதலில் கூறிய பொருளையும் அறிஞர் க. வெள்ளைவாரணனார் இரண்டாவது பொருளையும் ஏற்கின்றனர். இது அறியாமையால் விளைந்த ஒன்று நம்பியாண்டார் இவ்வாறு கபிலர், பரணர், நக்கீரர் என்ற மூவர் பெயர்களைக் குறிப்பிட்டுச் சங்கப் புலவர் நாற்பத்து ஒன்பதின்மர் என்று கூறும் இப்பாடலைக் கூர்ந்து நோக்கினால் ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும். தனித்தனியான இரண்டு செய்திகளை இவர் ஒன்றாகக் கருதிக் குழம்புகிறார் என நினைய