பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 6 5.5 வேண்டியுள்ளது. இறையனார் களவியல் உரையில் காணப் பெறும் கதைகள் இவர் காலத்திலும் வழங்கியிருத்தல் வேண்டும். ஆலவாயான் தலைமையில் இருந்த புலவர் கணக்கு நாற்பத் தொன்பது என்ற செவிவழிக் கதையை இவர் அறிந்திருந்தார். பதினொன்றாம் திருமுறையில் குறிப்பிடப்பெறும் கபில, பரனரைச் சங்கப்புலவர் என்று தவறாகக் கருதிவிட்டார் மேலும் இவருடைய காலத்தில் உதிரிப் பாடல்களாக வழங்கிய இரண்டு சிவபெருமான் திருவந்தாதிகள், சிவபெருமான் இரட்டை மணிமாலை, மூத்த நாயனார் இரட்டை மணிமாலை, திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பவற்றின் ஆசிரியர்கள் என்று கூறப்பெற்ற பிற்காலத்திய கபிலர், பரணர், நக்கீரர் என்பவர் களைப் பழைய சங்க காலப் புலவர்கள் என இவர் கருதிக் குழம்பி விட்டார். இந்தப் பெயருடைய மூவரும் மேலே கூறப்பெற்ற -ಸುಹಣ67ಕೆ சிவபெருமான் மேல் இயற்றியுள்ளனர். ᎧTöᎢüöᏗ '.....அரன் சேவடிக்கே, பொருளமைத்து இன்பக் கவிபல பாடும் புலவர்களே ! என்று நம்பி திருவந்தாதியில் குறிப்பிட்டதும் கபிலர், பரணர், நக்கீரர் என்று பெயர் குறிப்பிட்டதும் ஒருவகையில் சரியே. ஆனால் இப் பெயருடைய இவர்களைச் சங்கப் புலவர்கள் என்று நினைத்துக் கூறியதுதான் குழப்பத்தில் பிறந்ததாகும் தவறானது மாகும. . -- - - . - - : * - சேக்கிழார் இதனை ஏற்கவில்லை ஆழ்ந்து நோக்கினால் நம்பிகள் விவரம் புரியாமல் பாடின பாடலே இது என்று நினைப்பதில் தவறு இல்லை. இதன் உண்மையான பொருள் எதுவாக இருக்கலாம் என்பதைக் காண முற்படுவதன் முன்னர்ச் சேக்கிழாருக்கு இப் பாடலால் ஏற்பட்ட இடையூற்றைக் காணலாம். நம்பி இவ்வளவு விரிவாகக் கூறிவிட்ட பிறகு அது தவறு என்று எடுத்துக் காட்டவோ அன்றி முற்றிலும் வேறான பொருள் கூறவோ சேக்கிழாருக்கு முடியாமற் போய்விட்டது. திருவந்தாதியிற் கூறப் பெற்றுள்ள கருத்துக்கள் பலவற்றைச் சேக்கிழார் விரித்துரைக்கிறார் என்பது உண்மை யாயினும் எத்தனையோ கருத்துக்களை ஒதுக்கியும்,. ஒரு சில