பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 6 பெரியபுராணம் - ஓர் ஆய்வு வற்றிற்கு முழுமதிப்புத் தாராமல் போகிற போக்கில் கூறிச் செல்வதையுங் காண முடிகின்றது. திருவந்தாதியில் 'தருமகட் பேசினோன் வியவே நூல்போன சங்கிலி என்று தொடங்கும் பாடல் நம்பியின் அப்டாவித் தனத்தைக் காட்டுகிறது. திலகவதியார் வரலாற்றை நினைவிற் கொண்டு நூல்போன சங்கிலி என்று பாடுகிறார். இது அவரது அறியாமைக்கு எடுத்துக்காட்டு என்று கண்ட சேக்கிழார் இதனை அப்படியே விட்டுவிட்டார். இதே போன்று பிரிதொரு பாடலில் நம்பி குறிப்பிடும் கூணன், குருடன் என்ற இருவர் பற்றிச் சேக்கிழார் தாம் ஒவ்வொரு சருக்க முடிவிலும் பாடும் சுந்தரர் துதியில் 'வார் கொண்ட வனமுலையார் சருக்கம் முடிந்தவுடன் கூற்றுவ நாயனார் புராணத்தின் இறுதியில், 'கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம் யானும்பரவித் தீர்க்கின்றேன் ஏழுபிறப்பின் முடங்கு கூன்' " என்ற பாடலில் குறிப்பிடுகின்றாரே தவிர அவர் புராணத்தில் இந்த நிகழ்ச்சியைக் குறிக்கவில்லை. எனவே நம்பி கூறுவன அனைத்தையும் சேக்கிழார் ஏற்றுக் கொள்கிறார் என்றுங் கூறுவதற்கில்லை. - பொய்யடிமை இல்லாத புலவர், பரமனையே பாடுவார் என்று ஈரிடங்களில் பேசப்பெறுபவர் வெவ்வேறானவரே இந்த நிலையில் பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் கபிலர், பரணர், நக்கீரர் என்ற சங்கப் புலவர்த் தொகுதி என நம்பி குறித்ததைச் சேக்கிழார் ஏற்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம். இப்புலவர்களுள் எவரும் ஆலவாய் அரன் சேவடிக்கு அன்புடையவராகத் திகழ்ந்தனர் என்று கூற எவ்விதச் சான்றும் இல்லை. தவிர ஆலவாயான் சங்க மருவிய புலவர்களால் பாடப் பட்டான் என்று கூறவும் எவ்விதச் சான்றும் இல்லை. அகத்திணையுள் களவு பற்றிப் பாடுபவர் பொய் கலவாமற்பாட முடியாது. இப் பொய்யினால் யாருக்கும் எவ்விதத் தீமையும் இல்லை என்றாலும் பொய்யும் புனைந்துரையுங் கொண்ட அகத்துறைப் பாடல்களை மட்டும் பாடினவர்களைப் பொய்யடிமை இல்லாத புலவர் எனக் குறிப்பிடுதல் முற்றிலும் பொருந்தாக் கூற்றேயாகும். சங்கப் புலவர்கள் எவரும்