பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் Ꮾ 5 7 இறைவனைப்பற்றித் தனியேயோ அன்றித் தம் பாடல்களுள் ஒன்றிரண்டிலோ பாடினர் எனக் கூற எவ்விதச் சான்றும் இல்லை. திருமுருகாற்றுப் படையும் பரிபாடலிற் சிலவும், தெய்வம்பற்றிப் பாடுகின்றன எனினும் (கடவுள் வாழ்த்துப் பாடல்களும் புறம், அகம், பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்துக்கள் நீங்க) அவை முருகனையும் திருமாலையுமே பாடியுள்ளன என்பதால் திருவந்தாதிக்காரர் கூறுவதுபோல்,

  • * * * - திருவாலவாய் அரன் சேவடிக்கே -

பொருளமைத்து இன்பக் கவிபலபாடும் புலவர்கள்' " என்று கூறல் பொருந்தாக் கூற்றேயாகும். இவ்வாறு இருப்பதை நன்குணர்ந்த சேக்கிழார், நம்பியின் கூற்றை ஏற்கத் தயாராக இல்லை. அதே நேரத்தில் சுந்தரரின் இந்தத் தொடரால் குறிக்கப் பெற்றவர் வேறு ஒரு தனியடியார் என்று சேக்கிழார் அறிந்திருந்தாலும் நம்பிக்கு மாறாக அதனைக் கூறவும் இயலாது. நம்பி கூறியவற்றை ஏற்றுக் கொள்ளாமல் விட்டுவிடுவது என்பது ஒன்று. அவர் கூறியதை மறுத்து இவர் வேறு ஒருவர் என்று துணிந்து கூறுவது என்பது மற்றொன்று. இரண்டாவது வகையில் செல்லச் சேக்கிழார் துணியவில்லை. அதே நேரத்தில் அகத்திணைப் பாடல் பாடியவர்களை அடியார் கள் என்று ஏற்கவும் விரும்பவில்லை. எனவே பட்டும் படாமலும் பாடும் புது வழியை மேற் கொள்கிறார் காப்பியக் கலைஞர். இராசமாணிக்கனார் இப்பகுதி பற்றிப் பேசும்போது நம்பியை ஏற்காமல் சேக்கிழார் பாடிவிட்டார் ' என்று கூறியதை மறுக்க வந்த அறிஞர் வெள்ளைவாரணனார், கபிலர், பரணர், நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது பல்புலவோர் எனப் புலவர் பெயர் களை எண்ணிய நம்பியாண்டார் நம்பிகள், முதலிற் குறித்த சங்கப்புலவர்கள் இன்பவொழுக்கமாகிய அகத்திணைபற்றிப் பாடிய பாடல்கள் மேற்போக்காக நோக்கும் வழி, உலகியல் பற்றிய அகத்திணை ஒழுகலாற்றை உணர்த்துவனவாகவும், அன்பு நெறிப் பாடல்களாகிய அவற்றைக் கூர்ந்து நோக்கும் வழி எவ்வுயிர்க்கும் இன்பம் நல்கும் அன்புருவாகிய இறைவனையே ஆன்ம நாயகனாகக் கொண்டு அன்பு செய்து அவன் திருவடி களை யடைதற்குரிய அருள்நெறிக்குத் துணை செய்வனவாகவும் அமைந்த நுட்பத்தினை, - 'அருள் நமக்கீயும் திருவாலவாயரன் சேவடிக்கே பொருளமைத்தின்பக் கவிபலபாடும் புலவர்களே '