பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 8 பெரியபுராணம் - ஓர் ஆய்வு எனவரும் தொடரில் குறித்து அப்புலவர் பெருமக்களது சிறப்பினை இனிது விளக்கியுள்ளார்' என்ற முறையில் இராசமாணிக்கனாரை மறுப்பது முற்றிலும் பொருந்தாக் கூற்றுக்களேயாகும். பின்னர்த் தோன்றிய ஆளுடைய பிள்ளையார், நம்மாழ்வார் போன்றோர் அகத்துறையில் தம் ஈடுபாட்டை வெளிப்படுத்தினர் என்பதைக் கொண்டு அவர்கட்கு எண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட அகத்திணைப் பாடல்களைப் பக்திப் பாடல்கள் என்று கூறுவது வியப்பைத் தரும் வாதமாகும்! குறுந்தொகை, நற்றிணைப் பாடல்களைப் பாடியே இறைவன் திருவடியை அடைய முடியும் என இவ்வாசிரியர் நம்புகிறவர் போல் தெரிகின்றது! இனி இந்த வெற்று வாதத்தை விட்டுவிட்டுச் சேக்கிழார் எவ்வாறு நம்பியை மறைமுகமாக எதிர்க்கின்றார் என்பதையும் காணலாம். நாற்பத்தொன்பது புலவர்கள் பாடலை ஒருமுறை படித்திருந்தாலும் நம்பி இவ்வாறு பாடியிரார். இறையனார் களவியலில் வரும் செவிவழிக் கதையை மட்டும் தெரிந்தமையின் ஆலவாயன் தலைமையிற் கூடிய இப்புலவர்கள் இறையருள் பெற்றவர்கள் என்ற முடிவுக்குத் தாமே வந்து விட்டார் நம்பி. நம்பியாரூரரின் தொடர் தனியடியார் கூட்டத்துள் இருக்கின்றதே இது யாரேனும் தனியடியாரைக் குறிப்பது ஆகுமோ? என்ற ஐயமோ, கவலையோ நம்பியின் மனத்தில் தோன்றவே இல்லை; எனவேதான் 'சங்கப் புலவர்கள் என்று பாடிவிட்டார். இப்புலவர் பாடல்கள் பலவற்றையும், தொல்காப்பியத் தையுங்கூட அறிந்திருந்த சேக்கிழாருக்கு நம்பி செய்த பெரும் பிழை எளிதிற் புலனாகி இருக்கும். என்றாலும் அவர் செய்த இப் பிழையை வெளியிற் கூறவும் விரிநூல் செய்த அமைச்சர் பெருமான் விரும்பவில்லை. நம்பியின் கருத்துப் பிழையாகலின் அதனை ஏற்கவில்லை; ஆனால் அவற்றை காட்டிக் கொடுக்கவும் கூடாது என்ற நிலையில் காப்பியக் கலைஞர் ஒரு புது வழியை மேற்கொள்கிறார். மூவர், காரைக்காலம்மை, சேரமான் போன்றவர்கள் இறைவனைப் பாடியது உண்மை. ஆனால் இவர் கள் தவிர வேறு யாருமே இறைவனைப் பாடவில்லை என்று கூறிவிட முடியுமா? அவ்வாறு கூறுவதும், நினைப்பதும் பெருத்தவறு. மேலும் தொகையடியார் பற்றிக் கூறும் பாடலின் இரண்டா வது அடியும் இதற்கு அரண் செய்வதாக அமைந்துள்ளது.