பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 6 59 'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன். ' என்ற அடிகள் பரமனையே பாடும் தொண்டர்கள் எல்லா நாடு களிலும், எல்லாக் காலங்களிலும் உண்டு என்பதை வலியுறுத்தி நிற்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் வரும் சொல்லமை தியை ஆய்கின்றார் சேக்கிழார். 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” 'பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்' என்ற இந்த இரண்டு அடிகளும் உறுதியாக வெவ்வேறு நபர் களைக் குறிக்கின்றனவே தவிர ஒரே கூட்டத்தாரைக் குறிக்க வில்லை என்பது தெளிவு. இரண்டாவது அடியில் கூறப் பெற்றவர் கள் இறைவனைப் பாடும் இயல்பினர். இவர்கள் முக்காலத் திலும் உள்ளவர்களாவார். எனவே முதலிற் காட்டப் பெற்ற தொடரில் குறிக்கப்படுபவர் ஒரு குறிப்பிட்ட தனியடியாராகவே இருத்தல் வேண்டும் என்பது சிந்திப்பார்க்கு விளங்காமற் போகாது. பொய்யடிமை இல்லாத புலவர் என்பதற்குக் கபிலர், பரணர் போன்ற சிவனடி மறவாச் சங்கப் புலவர் என்று நம்பி கூறும் பொருளை ஏற்றுக் கொள்வதானால் மேற்சுட்டிய 'பரமனையே பாடுவார் என்பவர் யாவர்? என்ற வினாவிற்கு விடைகூறல் இயலாததாகிவிடும். இந்த இரண்டு தொடர்கட்கும் விரிவுரை கூறவந்த நம்பி 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்பதற்குச் சங்கப் புலவர் என்று விரிவு செய்து விட்டமையின், 'பரமனையே பாடுவார்' என்பதற்கு இன்னார் என்று கூற முடியாமல் திண்டாடுகிறார். பின்னர்ப் பொதுவாக வடமொழி தென்மொழிகளில் இயல் இசைகளில் அம்பலவனைப் பாடுபவர் கள் என்ற பொருளில், 'தொகுத்த வடமொழி தென் மொழி யாதொன்று தோன்றியதே மிகுத்த இயலிசை வல்ல வகையில் விண் தோயுநெற்றி வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல் உகுத்த மனத்தொடும் பாடவல்லோர் என்பர் உத்தமரே ' - - என்று தம் திருவந்தாதியில் பாடுகிறார். பரமனையே பாடுவார் என்ற தொகையினரை விளக்க இப்பாடல் ஒரளவு பொருத் தமானது என்பதில் ஐயம் எதுவும் இல்லை. ஆனால்