பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 375 காப்பியத்திற்குரிய உறுப்பு என்று கூறுவது பின்னர்ப் பெருங் குழப்பத்தை விளைக்கக் காரணமாயிற்து. ஒப்பற்ற உரை யாசிரியராகிய அடியார்க்கு நல்லார் தொல்காப்பியனார் கூறிய அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுளுக்கு உரியவை என்று கூறுவதுடன் அமையாமல் அது நாற்பொருள் பயக்க வேண்டும் என்றுங் கூறுவது தண்டி போன்ற பிற்கால நூல்களின் செல்வாக்கினாலேயேயாம். இவ்வாறு பிற்காலத்தில் வடமொழியை அடியொற்றித் தோன்றிய தண்டியின் கூற்றில் மயங்கிய காரணத்தால், சிலம்பில் வீடுபேறுபற்றிக் கூறப்பட வில்லையே என அடியார்க்கு நல்லார் கவல்கின்றார். அதன் காரணமாகச் சிலம்புடன் தொடர்பில்லாததும் சைனசமயத்துக்கு மாறுபட்ட பெளத்தம்பற்றிப் பேசும் மணிமேகலையைச் சிலம் புடன் ஒருங்கிணைத்து சிலம்பு மூன்று கூற, மணிமேகலை துறவினைக் கூற நாற்பொருளும் பூரித்த பெருங்காப்பிய மாகப் பூரித்தலைக் கருதி.... என்ற முறையில் பேசிச் செல் கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்கள், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் என்ற இத் திறத்தோர் அனைவரும் தமிழ்க் காப்பியங்களாகிய சிலம்பு, மேகலை, பெருங்கதை, சூளாமணி, சிந்தாமணி, கம்பன் இராம காதை ஆகியவை தோன்றியபின்னரே இத்தமிழகத்தில் தோன்றினர் என்றாலும் இவற்றை வைத்துக் கொண்டு காப்பிய இலக்கணம் ஒன்றை வகுக்க முற்படவில்லை. அதன் மறுதலையாகப் பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தாமணிக்குத் தொல்காப்பியமே இலக்கணமாக அமைய வேண்டும் என நச்சினார்க்கினியர் பேசுகிறார். இலக்கியத் திறனாய்வு நன்கு வளர்ந்துள்ள இந்நாளிற்கூட இலக்கிய இனங்களை ஒரளவு பிரித்துக்காட்ட முடியுமே தவிர எந்த ஒர் இனத்துக்கும் மீற முடியாத சட்டம் வகுத்து இதனுள் அடங்குவதே இந்த இலக்கிய இனம் என்று கூறுதல் இயலாத காரியம். மேனாட்டுக் காப்பியங்களின் பொதுத் தன்மையை எடுத்துக்கூறவந்த சி.எம். பெளரா என்ற திறனாய்வாளர் பின்வருமாறு கூறுகிறார். 'காப்பியம் என்பது நீண்ட கவிதை என்பதையும், காம்பீரியமும், சிறப்பும் முக்கியத்துவமும் உடைய நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அது அமைய வேண்டும் என்பதையும், இந்த நிகழ்ச்சிகள் என்பவை பெரும்பாலும் போர் முதலிய கொடுமை நிறைந்த நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும் என்பதையும் பலரும் ஒப்புவர். மனிதனுடைய பெருமை, நற்பண்புகள் என்ற மானிடனின் சிறப்பை அவை