பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 60 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்ற தொடருக்கு இவர் கூறிய விளக்கம் சற்றும் பொருத்தமில்லாததே யாகும். இதுபற்றி மிக விரிவாக ஆய்ந்து தம் கருத்தை 55 ஆண்டு களின் முன்னர்ச் சித்தாந்தம் இதழில் வெளியிட்ட பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவணமுதலியார் அவர்களின் முடிவுகள் சில வற்றை இங்கு நினைவுகூர்தல் ஏற்புடையதாகும். தொகையில் வரும் அடைமொழிகள் கருத்துடை அடைகளாகும். சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ஒவ்வோர் அடியில் ஒர் அடியாரைப் பெரும்பாலும் குறித்துச் செல்கிறார். சிலவிடங் களில் ஓர் அடியில் ஒன்றுக்கு மேற்பட்ட அடியார்களின் பெயர் களைச் சேர்த்துச் சொல்வதும் உண்டு. சண்டேசர், நாவரசர், ஞானசம்பந்தர், சாக்கியர் கழற்சிங்கன் என்பவர்களைக் கூறுகையில் மட்டும் ஒன்றுக்குமேல் இரண்டு அல்லது மூன்று அடிகளிற் குறித்துள்ளார். இது எவ்வாறாயினும் ஒரே அடியில் ஒர் அடியாரைக் கூறமுற்பட்ட அவர், அந்த அடியாரின் வாழ்க்கையில் உயிர் நாடியாக இருந்த தொண்டை, செயலைப் பாடும் பழக்கம் உடையவராக இருந்தார் என அறிய முடிகிறது. 'இல்லையே என்னாத இயற்பகை', 'வேல்நம்பி எறிபத்தர்' என்பன போன்ற அடை மொழிகள் ஒரு சிலருக்குத் தரப்பட்டுள்ளனவே தவிர பலர் அடையின்றியே பெயர் கூறப்படுகின்றனர். இம்முறையைத் தழுவாமல் ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் தரப்பெறும் அடை மொழிகள் கருத்துடை அடை மொழிகளாக இருத்தலையுங் காண முடிகின்றது. 6 l 'வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்' 2. 'கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன். ' 3. மதுமலர்க் கொன்றையான் அடியலாற்பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன். '"

  • I 9

4. நம்பிரான் திருமூலன் 2 G 5. 'நாட்டமிகு தண்டிக்கும்...' 6. பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் 2 I இந்த ஆறு இடங்களிலும் பேசப்பெறும் அடியார்கள் ஏனைய அடியார்களைப் போன்றவர்கள்தாமே ஒழிய, இவர்களைத் தனியே காட்ட வேறு எவ்விதக் காரணமும் இல்லைபோல்