பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 6 6 1 தோன்றுகிறது. எனவே இந்த அடைமொழிகளின் தனித் தன்மையை யாரும் கூர்ந்து நோக்கும் தேவை இல்லாமற் போய் விட்டது. ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு சில கருத்துக்கள் புலனா காமற் போகாது. மெய்ப்பொருள் வரலாற்றை மேலோட்டமாக அறிந்தவர்கள் அவர் பகைவனால் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார் என்பதை யும், கண்ணப்பர்பற்றி நினைக்கும்பொழுது கொல், எறி, குத்து, வெட்டு என்ற சொற்களை யல்லாமல் எந்தக் கலைஞானமும் இல்லாதவர் என்பதையுமே மனத்திற் கொள்வர். இனி இருக்கு வேதியராகவும் முத்தீ வளர்த்தும், யாகங்கள் புரிந்தும் வாழ்க்கை நடாத்தும் கவுணிய மரபில் தோன்றிய பிள்ளையாரை வேதவழக்கொடுபட்ட வைதிகர் என்று நினைப்பதும் சரியே யாகும். பக்திமார்க்கத்தில் ஈடுபட்டவர்கள் வரலாற்றின் இடையே யோகம், தந்திரம், மந்திரம், சக்கரம் என்பவைபற்றிப் பேசும் திருமூலருக்கு இடம் இருத்தல் பொருந்தாது என்று கருதுவதும் சரியேயாகும். தண்டியடிகள் என்று கூறினவுடன் இவர் குருடர் என்ற எண்ணந்தான் முன்னிற்கும். ஆனால் இந்தப் பெருமக்களைப் பொறுத்தமட்டில் எடுத்த எடுப்பில் தோன்றும் இந்த எண்ணங்கள் தவறானவை என்று கூற விரும்பு கிறார் சுந்தரர்! அதனை எவ்வாறு குறிப்பது? விரிவாக அவர்கள் வரலாற்றைக் குறிப்பிட முடியாத சூழ்நிலையில் இக்கருத்தை எவ்வாறு வலியுறுத்திக் கூறல் முடியும்? திருவருள் பெற்றுப் பாடினவராகலின் இந்த அடைமொழிகள் மூலம் தம் கருத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் சுந்தார். இவ் அடைமொழிகளின் விளக்கம் மெய்ப்பொருள் முத்தநாதனால் குத்தப்பட்டார் எனினும் தம் கொள்கையை நிலை நாட்டித் தம்மைக் குத்தியவனையும் 'நமர்' என்று கூறும் நெஞ்சுரம் பெற்றவரை வென்றவர் என்றுதான் கூறல்வேண்டும்! இவரைக் குத்திவிட்டதால் கோழை யானானே தவிர முத்தநாதன் வெற்றி பெற்றான் என்பது பொருளற்ற கூற்றாகும். எனவே வெற்றி தரும் ஆறுகள் பலவற்றிலும் மிகவும் வல்லவராய மெய்ப்பொருள் என்ற அடை மொழிகள் ஆழ்ந்த கருத்தைப் புலப்படுத்துவனவாக அமைந் துள்ளமை கண்கூடு. - - - இனி அடுத்துள்ளது 'கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்' என்பதாகும். வெறும் ஏட்டுக் கல்வியை நம்மவர் என்றுமே