பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 பெரியபுராணம் - ஒர் ஆய்வு மதித்ததில்லை ! கலைஞானம் என்பது மனிதனை உயர்த்தப் பயன்பட்டால் அது உண்மையான ஞானம். இல்லாக்கால் அந்தக் கலைஞானம் அதனை உடையானுக்கு ஒரு பாரமாக அமைந்து அவனுடைய அகங்காரத்தை வளர்க்கும் கருவியாக அமைந்துவிடுகிறது! உண்மையான கலைஞானத்தின் பயன் என்ன என்பதைச் சேக்கிழார் பலவிடங்களிற் கூறிச் செல்கின்றார். 'புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலை..... ' என நாவரசர் புராணத்திலும், 'அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடும் கழலே ' எனச் சண்டேசர் புராணத்திலும் 'உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளிவடித்து அறிந்த பொருள் சிவன் கழலிற் செறிவென்றே கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்றுதைத்த கழற்தன்பு பளளமடையாய எனறும பயின்றுவரும் பண்புடையார்' " என்று சிறுத்தொண்டர் புராணத்திலும் கூறுகிறார். கலை ஞானம் இறுதியில் இறைவனிடத்து ஒருவனைச் சேர்க்காவிடின் அக்கலைஞானம் அதனைப் பெற்றவனுக்குப் பாரமாக முடிந்து விடும் என்பது காப்பியக் கலைஞரின் உறுதியான நம்பிக்கை என்பதை மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுக்கள் நன்கு தெளிவிக்கும். கலைஞானம் பெற்ற சிவகோசரியார் பல்லாண்டு களாகக் காளத்திநாதனை வழிபட்டும் இறுதியில் அப் பெருமானைக் கனவிற் காணும் தகுதி மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் கலை என்ற சொல்லையே கேள்விப்படாத திண்ணனார் ஆறு நாட்களில் இறைவன் தன் கையைப் பற்றும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றால், கலைஞானத்தை அறிவின் துணை கொண்டு அறிய முற்படாமல் உணர்வினால் உணர்ந்தவர் அவர் என்பதை எளிதில் ஊகிக்க முடியும். இதனை மனத்துட் கொண்டே சுந்தரர் 'கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்' என்று அவருக்கு அடை தந்து பேசுகிறார்.