பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 6 6.3 மூன்றாவதாக உள்ள திருஞானசம்பந்தர் வேதவழக் கொடுபட்ட வைதிகராயினும் 'அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்தும்மே ' என்றும் 'வேத நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே " . என்றும் வேதத்திலுள்ளது நீறு ' என்றும் பாடுவதால் இவரை வைதிகர் என்று கருதிவிடக்கூடாது என்பதற்காகவே சுந்தரர், 'மதுமலர்க் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்' என்று அடை தந்து பேசுகிறார். திருமூலர் இந்தப் பக்தி இயக்கத் தொண்டர் குழுவில் எவ்வாறு சேர்க்கப் பெற்றார் என்பதே வினாவுக்குரிய ஒன்றாகும். பக்தி இயக்கக்காரர்கள் கூறும் சிவம், அன்பு என்பவை தவிர்த் திருமூலர் கூறும் யோகம், தாரணை, பிரணாயாமம் முதலியவை பற்றிப் பக்தி இயக்கத்தார் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் திருமந்திரம் தேவார, திருவாசக, இசைப்பா போன்ற பக்திப் பாடலன்று. அப்படியிருக்க எவ்வாறு இவர் இத்தொகுப்பினுள் இடம் பெற்றார் என்ற வினாவிற்கு விடைகூறல் கடினம் என்றாலும் இவ்வாறு ஐயுறுவார் ஐயங்களை நீக்குவது போலச் சுந்தரர் 'நம்பிரான் திருமூலர் என்று அடை தருகின்றார். 'நம்பிரான்' என்ற அடையால் நமக்கு உரிமை உடைய தலைவர் என்பது பெறப்படுகிறது. தண்டியடிகள் என்று கூறினவுடன் இவர் கண்ணில்லாதவர் என்ற நினைவுதானே தோன்றும்? அந்நினைவு தவறானது என அறிவுறுத்துவார் போல, கண்ணில்லாவிடினும் கண்ணின் பயனாம் நாட்டத்தைப் பெற்றவர் என்ற கருத்தை அறிவுறுத்துகிறார். - இதுவரை காட்டப் பெற்ற ஐந்து மேற்கோள்களிலும் சுந்தரர் ஒன்றை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றார் என்பது தெளிவு. எந்த ஒருவரைப் பற்றிக் கேட்டாலும் அவருடைய 44