பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66.4 பெரியபுராணம் - ஓர் ஆய்வு வாழ்க்கையில் நடந்து, நாம் அறிந்த முக்கியமான ஒன்று, நம் நினைவில் வருதல் ஒருதலை. அவர்களிடம் உள்ள தலையாய குணம் நம் நினைவில் வருவது மனித மனத்தின் இயல்புகளில் ஒன்றாகும். அப்படி நினைவில் முதலில் வரும் தலையாய பண்பு அவரை எடையிடுதற்கு முரணானதாக இருப்பின் சுந்தரர் அதைத் தடுத்து நிறுத்தும் முறையில் அடைமொழிகளை அடுக்கியே அந்த அடியாரை அறிமுகப்படுத்துகின்றார் என்பதை அறிய முடிகின்றது. பொய்யடிமை இல்லாத புலவர்-காரணப் பெயர் இதனை மனத்துட் கொண்டு 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்ற தொடரைச் சிந்திக்க வேண்டும். யாரோ ஒர் அடியாரின் வாழ்வில் பொய் விளையாடி இருக்கின்றது. அவருடைய பெயரைக் கேட்டவுனேயே இவர் பொய் கூறினார் என்ற எண்ணம் கேட்பவர் மனத்தில் எழுதல் இயற்கை. அப்படிப் பட்ட அந்த அடியாரைக் குறிப்பிட வந்த சுந்தரர் அவரைப் பொய்யர் என்று முடிவுசெய்யும் நம் நினைவு தவறு என்பதை எடுத்துக் காட்டவே 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்று அவரைக் குறிப்பிடுகின்றார் என்பதை ஊகிக்க முடிகின்றது. அந்த ஒருவர் தனியடியாரே தவிரத் தொகையடியார் கூட்டத் தைச் சேர்ந்தவரல்லர் என்பதும் வெளிப்படை. முதல் பாட்டின் முதலடி இறைவன் எடுத்துக் கொடுத்ததாகும். எனவே அதில் கவனத்தைச் செலுத்தாமல் அடுத்த அடியைப் பார்த்தால் ஏதோ ஒரு வரிசையில் தனிப்பட்ட தொண்டர்களைப்பற்றிச் சுந்தரர் பேசத் தொடங்குகிறார் என்பது நன்கு விளங்கும். இங்குக் கூறப் பெற்றவர்கள் அனைவரும் சுந்தரர் காலத்திலோ, தேவாசிரிய மண்டபத்திலோ இருந்தவரல்லர். இறையருள் உள் நின்று உணர்த்தவே அந்த உணர்வுக்கு வடிவு கொடுத்துப் பாடுகிறார் நாவலூரர். அப்படியானால் வரிசையாகத் தனியடியார்களைக் கூறிக் கொண்டு வருகையில் திடீரென்று தொகையடியார் எவ்வாறு இதில் இடம் பெறுகிறார்? முதல் ஆறு பாடல்களில் 39 நாயன்மார்கள் இடம் பெற்றுவிட்டார்கள். 7வது பாடலில் முதலடி நீங்க இரண்டாம் அடியில் 41வதாக உள்ள புகழ்ச்சோழர் இடம் பெறுகிறார். அப்படியானால் 40வதாக வருபவரும் தனி ஒருவராகத் தானே இருத்தல் வேண்டும். இதன்பிறகு 17 அடியார்கள் வரலாறு கூறிய பின்னர் 58வதாகத் தனி ஒரு பாடலில்தானே தொகையடியார் கூட்டம் பேசப்பெறுகிறது. இந்த முறைவைப்பில் குழப்பம் ஏற்படும்படியாக 40வது அடியாரைத் தொகையடியாராகச் சுந்தரர் பாடியிருக்கவே