பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 66.5 மாட்டார். இப் பெருமகனார் இறையருள் பெற்றிருந்ததுடன் சிறந்த கல்விமானாகவும் இவை இரண்டுக்கும் மேலாக ஒப்பற்ற கவிஞனாகவும் இருந்துள்ளார் என்பது தேற்றம். அப்படியானால் தனியடியார்களை முன்னும் பின்னும் பாடுகின்ற இவர் திடீரென்று ஒரு தொகையடியார்த் தொகுப்பை இடையில் பாடினார் என்று கூறல் அவர் புலமைக்கும் இழுக்காகும். அப்படியானால் யாரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்? என்று சிந்திப்பதில் தவறு இல்லை. - அறுபத்து மூவரில் முப்பதின்மருக்கு மேல் காரணப் பெயரால் அழைக்கப் படுகின்றனர் - ஏனைய தனியடியார்கள்பற்றிக் கூறும்போது கூடுமானவரை அவர்கள் இயற்பெயர்களையோ, பிறர் அவர்கட்கு இட்ட பெயர் களையோ கூறிப்பாடுகிறார் என்பது உண்மைதான். என்றாலும் திருநீலகண்டர், இயற்பகையார், மெய்ப்பொருள், ஏனாதி, திருக் குறிப்புத்தொண்டர், மூர்க்கர், சாக்கியர், அதிபத்தர், கணம் புல்லர், நெடுமாறர், முனையடுவார், செருத்துணை, கோட்புலி, நேசர், குறும்பர், அமர்நீதி, மானக்கஞ்சாறர், சோமாசி மாறர், சிறப்புலி, குலச்சிறை, கணநாதர், விறல்மிண்டர், திருநாளைப்போவார், இடங்கழி என்ற அடியார்கள் பெயர்கள் அனைத்தும் காரணம்பற்றி அவர்கட்கு வந்த பெயர்களே தவிர இவை அவர்கள் இயற்பெயர்கள் அல்ல. இந்தப் பட்டியலிலிருந்து கண்டால் முப்பதுக்கும் மேற்பட்ட வர்கள், இயற்பெயர் வழங்காமல், காரணப் பெயராலேயே அழைக்கப் பெற்றனர் என்பதை அறிய முடிகின்றது. பெரும் பான்மையானவர்கட்கு இக் காரணம் பெயர் வந்த விதத்தையும் சேக்கிழார் கூறுகிறார். ஆனால் இந்தக் காரணப் பெயர்களை அவர்கட்கு இட்டவர் சேக்கிழார் அல்லர்; நம்பியாரூரரே இப் பெயர்களைக் கூறியவராவார். எனவே, ஓர் அடியாரின் வாழ்க்கை யில் எது மிக இன்றியமையாத பண்பாக அல்லது செயலாக உள்ளதோ அதனைக் குறிப்பிடும் வழக்கமும், அதனையே அவர் காரணப் பெயராக வழங்கும் வழக்கமும், சுந்தரரிடம் காணப்படுவ தாகும். இந்த முறையை மனத்துட்கொண்டு பார்த்தால் எந்த ஒர் அடியாரைப்பற்றிப் பெயர் கூறியவுடன் நம் மனத்தில் தோன்றும் எண்ணம் தவறானதாக இருப்பின் அதனை மாற்றும் ஓர் அடை மொழியைப் பெய்து பாடுவார் சுந்தரர் என்பதும் நன்கு விளங்கும். -