பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 6 பெரியபுராணம் - ஓர் ஆய்வு தம்மைப் பொய்யன் என்று அடிக்கடிக் கூறிக்கொள்ளும் பக்தர் யார்? இத் தமிழகத்தில் வாழ்ந்த அடியார்களுள் யாரேனும் ஒருவர் ஒரு பொய் கூறியதாகவோ, தம்மைப் பொய்யன் என்று கூறிக் கொண்டதாகவோ வரலாறு உளதா? என்று பார்ப்பது முதற் கடமையாகும். சுந்தரருடைய இந்த அடைமொழி, அவருக்குப் பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த நம்பிகள் மனத்தை உலுக்கியிருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு யார் தம்மைப் பொய்யன் என்று கூறிக் கொண்டவர்? யாருடைய வரலாற்றை அறிந்த மாத்திரத்தில் இவர் பொய் கூறினார் என்ற தவறான எண்ணம் நம் மனத்தில் தோன்றுகிறது? அதே நேரத்தில் அவர் சிறந்த சிவனடியாராகவும் அழகிய பாடல்களை இயற்றும் புலவராகவும் இருந்திருக்க வேண்டும். இத்தனையும் யாராவது ஒர் அடியார் வாழ்வில் பொருந்தி இருந்து அவர் புலவராகவும் இருந்திருந்தால் அவரைத்தான் நம்பி குறிக்கின்றார் என்று கொள்வதில் தவறு இல்லை. இவற்றை எல்லாம் மனத்துட் கொண்டு நோக்கும் பொழுது மணிவாசகர் என்று அழைக்கப்படும் திருவாதவூரரே இத்தனைக்கும் பொருத்தமாக அமைகின்றார் என்பது விளங்கும். மணிவாசகர் என்று கூறினால் தவறில்லை மணிவாசகர் பொய் கூறினாரா? இவ்வாறு கூறுவது அடுக்குமா என்று சைவப் பெருமக்கள் சினம் அடையத் தேவை இல்லை. அவருடைய வரலாற்றைப் பாடிய பரஞ்சோதியார், திருவாதவூரர் புராணம் பாடியவர், வேம்பத்துர் நம்பி என்ற மூவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரணான முறையில் பாடு கின்றனர் எனினும் ஒரு சில நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் மூவரும் ஒன்றாகவே பாடுகின்றனர். பாண்டியன் பணத்தை எடுத்துக் கொண்டு குதிரை வாங்கச் சென்ற திருவாதவூரர் வழியில் திருப்பெருந்துறை என்ற ஊரில் ஒரு குருவைக் கண்டு அவரால் ஆட்கொள்ளப் பெற்றுத் தாம் யார்? எதற்காக வந்தோம்? என்பவற்றை எல்லாம் மறந்துவிட்டு அங்கேயே தங்கி விட்டார். பொருளனைத்தும் பல வழிகளில் செலவாகிவிட்டது. சிலநாள் சென்றதற்பின் இவர் என்ன நிலையில் உள்ளார் என்பதைக் கேள்வியுற்ற பாண்டியன் இவரை அழைத்து வருமாறு ஏவினான். அந்த அரசாணையைக் கேட்டபிறகுதான் திருவாத வூரார்க்குச் சுயநினைவு வந்தது. நடந்தவற்றை அறிந்து கொண்டார். தாம் இறைவனின் திருக்குறிப்பின் வழியே நடந்து