பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 66 7 கொண்டதாக அவர் உறுதியாக நம்பினார். எனவே அந்த இறைவன் தம்மைக் கைவிடமாட்டான் என்றும் அவர் நம்பினார். இவர் மனத்தின் உறுதி காரணமாகவும், உள்ளுணர்வினால் தூண்டப்பட்டதன் காரணமாகவும் அரசனிடம் சென்று ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று கூறிவிட்டார். என்றாலும் இவ்வாறு கூறுமாறு இறைவன் அவருக்குப் பணிக்கவில்லை! அவனுடைய அனுமதி இல்லாமல் ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று கூறியது பொய் என்று அவரே உணர்ந்து திருவாசகத் தில் பல இடங்களிலும் தம்மைப் பொய்யன் என்றே கூறிக் கொள் கிறார். அளவற்ற உறுதிப்பாட்டில் வந்த சொற்களாயினும் இறைவன் அனுமதி இல்லாமல் அவன் குதிரைகளைக் கொணர்வான் என்ற உறுதியான நம்பிக்கையில் கூறியதாயினும் இக் கூற்றுப் பொய்தான் என்பதில் ஐயமில்லை! மணிவாசகர்மேல் இவ்வாறு குறை கூறப்படுவதைப் பொறுக்காத சைவப் பெரு மக்கள் அவர் தம்மைப் பொய்யன் என்று கூறிக் கொள்ளும் இடங்கள் அனைத்தும் அவர் மனிதர்களிடைக் காணும் குற்றங் களைத் தம்மேல் ஏறட்டுக்கொண்டு பாடினார் என்று அமைதி கூறுவர். அவ்வாறு இருந்திருப்பின் திருவாசகமும் ஏனைய பாடல் கள் போல் இருந்திருக்குமே தவிர, ஊனினை உருக்கும் பாடல் களாக அமைந்திரா. மணிவாசகர் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த உண்மையான நிகழ்ச்சியை நினைந்து நினைந்து அவர் அழுததனாலேயே வீடு பேற்றைப் பெற முடிந்தது. 656 பாடல்களையுடைய திருவாசகத் தில் 17 இடங்களில் அடிகளார் தம்மைப் பொய்யன் என்று பேசுவது வியப்பானதேயாகும்! 1. 'செய்வதுஅறியாச் சிறுநாயேன் செம்பொற்பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக்கண்டும் கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டுடுத்திங்கு இருப்பதானேன் போரேறே!' 2.8 2. 'போற்றிஎன்போலும் பொய்யர் தம்மையாட்கொள்ளும் வள்ளல்' 29 3. தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி!