பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 66 9 17. 'பொய்யெலாம் மெய்யென்று........ மையலுறக் கடவேனை....... * 44 என்ற முறையில் கூறியுள்ளதுடன் தம்மை நாடகம் நடிக்கும் பொய் வேடக்காரன் என்றும் கள்வன் என்றும் பலபடியாகக் கூறிச் செல்வதையுங் காண முடிகிறது. 1. 'நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே விடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்' " 2. 'சோரனேன்....... * 46 3. அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னினல்லால்...... * 47 4. 'ஏசினும் யானுன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்...'" என்ற பாடல்களில் தம்மைப் பொய்யன் என்றும் கள்வன் என்றுங் கூறிக் கொள்வதுடன் தாம் பிழை செய்துவிட்டதாகவும், அதுவும் சிறிய பிழைதான் என்பதாகவும், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது பெரியவனாகிய அவனுடைய கடமை என்பதாகவும், தாம் கூறிய பொய்யை நினைந்து நினைந்து வருந்துவதாகவும் பாடுவதை ஆழந்து கவனித்தல் வேண்டும். திருச்சதகம் நூறு பாடல்களுள் மட்டும் தம்மைப் பொய்யன் என்று கூறிக்கொள்ளும் குறிப்புக்கள் பதினொரு இடங்களில் வருகின்றன. இவற்றை எல்லாம் கொண்டு நோக்குகையில் இவர் இறைவன் ஆணை இல்லாமல், ஆனால் அவன் மாட்டுக் கொண்ட உறுதியான பக்தி காரணமாகக் குதிரைகள் குறிப்பிட்ட நாளில் வரும் எனக் கூறிவிட்டார் என்று கருதுவதில் தவறில்லை. ஆனால் அந்த நாளில் குதிரைகள் வரவில்லை. எனவேதான் தம்மைப் பொய்யன் என்று கூறிக்கொண்டு வருந்துகிறார் என்பதை எளிதில் உணரமுடிகிறது. தனி ஒர் அடியாராகிய இவரது 'எலும்பை உருக்கும் பாடல் கள்' என்று வேற்று நாட்டவரும் புகழ்ந்து போற்றும் திருவாசக கத்தில் 656 பாடல்களில் இத்தனை இடங்களில் தம்மைப் பொய்யன் என்று கூறிக் கொண்டு, தம் பிழைக்கு வருந்து வதாகவும் பாடுகிறார் என்றால் இவருடைய வாழ்க்கையில் பொய் என்பது பெரிய விளையாட்டைச் செய்திருக்கிறது என்று