பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வெளியிடுகின்றன என்பதனால் அவற்றைக் கற்கும் நாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம். இந்த அடிப்படையில் காப்பியம் என்ற இனத்துள் நின்று அவற்றிடையே உள்ள வேறு பாடுகளை எளிதிற் காணமுடியும். தொடக்க நிலைக் காப்பியம் (authentic) இலக்கியக் காப்பியம் (literary) என்ற பிரிவினை நாம்அனைவரும் அறிந்ததேயாம். இத்தகைய பிரிவினைகூடக் கருத்து வேறுபாட்டையும் இந்த இலக்கணத்தில் அவநம்பிக்கை யையும் உண்டாக்கக்கூடும். ஏனென்றால், நுண்கலைகளுள் எந்த ஒன்றுக்கும் எந்த ஒரு சட்டமும் கட்டுப்பாடும் முற்றிலும் பொருந்துமென்று கூறுகையில் இது தான் அந்த இனத்தைச் சேர்ந்தது என்றோ இந்த இன இலக்கியம் இப்படித்தான் இருத்தல் வேண்டும் என்று கூறுவதோ ஆபத்தானதாகும். தொடக்க நிலை, இலக்கியக் காப்பியங்கள் என்ற பிரிவினை செய்து பெயர் கூறுவது கூடப் பொருத்தமானதா என்ற ஐயம் தோன்றுவது இயல்பே' வாய்மொழி இலக்கியங்களாகத் தோன்றி நீண்ட காலங் கழித்து எழுத்தில் இடம் பெற்ற பியூவுல்ப் (Beowolf), சுவர்க்க நீக்கம் போன்ற இலக்கியங்களிலும், இன்றும் வழக்கிலுள்ள மேனாட்டு இலக்கியங்களிற் கூட இப்பிரிவினை ஆபத்தானது என்று பவுரா கூறுகிறார் என்றால் நம் நாட்டைப் பொறுத்தவரை இவ் வாறு பிரிவினை செய்யும் பொழுது மிக மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் வாய்மொழி இலக்கியம் என்று கூறத்தக்கவை (கைலாசபதியின் முயற்சியை யும் மீறி) எவையும் இல்லையாதலின் இலக்கியக் காப்பியங்கள் பற்றித் திறனாய்வாளர் கூறுவனவற்றுள் இன்றியமையாத பகுதிகள் சிலவற்றைக் காணலாம். 1. இலக்கியக் காப்பியங்களும் தொடக்க நிலைக் காப்பிங் கள் போலவே அடைச் சொற்கள் தொகுதியைப் பயன் படுத்துகின்றன. திரும்பத் திரும்பச் சில சொற்றொடர் களைப் பயன்படுத்துகின்றன. ஒரு பொருள் குறித்த பல சொற்களை அடிக்கடி பயன்படுத்துகின்றன. இங்குக் கூறப்பெற்றவை வாய்மொழிப் பாடலுக்கும் இலக்கியப் பாடலுக்கும் பொது என்றாலும் இலக்கியக் காப்பியம் இவற்றை நம்பியிருக்க வேண்டிய தேவை இல்லை. 2. இலக்கியக் காப்பிய ஆசிரியர்கள் தனிப்பட்ட சொற்களில் அதிகக் கவனம் செலுத்துவதால் தொடர் சொற்கள், தொடர் அடைகள், வாய்ப்பாடுகள் என்பவற்றைப் பற்றி அதிகக் கவனம் செலுத்த தேவை இல்லை. காப்பியம்