பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 7 O பெரியபுராணம் - ஒர் ஆய்வு கருதுவதில் தவறு இல்லை. இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு சுந்தரரின் 'பொய் அடிமை இல்லாத புலவர்' என்ற திருத்தொண்டத் தொகையின் அடியைப் பார்த்தால் அப் பெருமகனார் இவரையே மனத்துட்கொண்டு பாடினாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திருத்தொண்டத் தொகையில் இடம் பெறாத மார்க்கண்டர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்றவர் கள் வரலாறுகளும் தமிழ் நாட்டில் வழங்குகின்றன. எனினும் யாருடைய வரலாற்றிலும் பொய் என்பது இத்துணைப் பெரிய செயலை நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. எனவே நம்பியாரூரர் குறிப்பது இவரையே என்று கொள்ள இடமுண்டு. - திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரர் காலம் கி.பி. 845 முதல் 865 வரை இருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின் றனர். இவருடைய காலத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் பூரீமாறன் பூரீவல்லபன் (கி.பி. 830-862) என்ற பாண்டிய னாவான். இவனை அடுத்துப் பட்டத்திற்கு வந்தவன் வரகுணன் என்பவன். இவனுடைய ஆட்சி கி.பி. 862 முதல் 885 வரை இருந்தது. இவன் காலத்தில் திருவாதவூரராகிய மணிவாசகர் இருந்தார் என்று ஆய்வாளர் கூறுகிறார்கள். அப்படி எனில் சுந்தரருடைய காலமும், மணிவாசகர் காலமும் ஏறத்தாழ ஒரே காலம் என்றாகிறது. இந்தக் கால எல்லைகள் தோராய மானவையே தவிரத் துல்லியமானவை அல்ல. எனவே மணிவாசகர் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் திருவாசகமும் சுந்தரர் கவனத்திற்கு வந்திருந்தால் அதில் வியப்படைய ஒன்றும் இல்லை. பாண்டி நாட்டின் வழியாகத்தான் சுந்தரர் இரண்டு முறை சேர நாடு சென்றுள்ளார். சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையில் சிறந்த சிவபக்தனான இரண்டாம் வரகுணனைப் பாடாமையின் சுந்தரர் இவன் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும் என்று இராசமாணிக்கனார் தம் பெரியபுராண ஆராய்ச்சி என்ற நூலில் குறிக்கின்றார்." இக் கருத்துக்கு எதிராகக் கயிலாயநாதர் கோவிலைக் கட்டிய இரண்டாம் நரசிம்மன் காலமே சுந்தரர் காலம் எனக் கூறுவாரும் உண்டு. இந்த ஆய்வுகள் அனைத்தும் எங்கோ ஓரிரு இடங்களிற் காணப்பெறும் சொற்களை வைத்துக் கொண்டு செய்யப் பெறுபவை ஆகும். இவற்றின் உண்மை ஒருபுறம் இருக்க வரகுணனைச் சுந்தரர் பாடவில்லை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர் இரண்டாம் வரகுணனுக்கு முற்பட்டவர் என்ற முடிவுக்கு வருவது நேரிதாகப் படவில்லை. அவருடைய தேவாரத்தில் விரிவான முறையில் வரலாறு பேசப் பெற்ற மார்க்கண்டனும், புலிக்கால் முனிவரும் தொகையில்