பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 6 7. I - இடம் பெறவில்லை. எனவே தொகையில் இடம் பெற்றார் அல்லது பெறவில்லை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வருவது நேரிதாகப் படவில்லை. இந்த நிலையில் மணிவாசகர் திருவாசகத்தில் இத்துணை முறைகள் தம்மைப் பொய்யன் என்று கூறிக் கொள்வதால், அந்தப் பொய்யர் என்ற பட்டம் அவருக்கு உரியதன்று; அவர் பெரும் புலவராகவும் இருந்தவர்; பொய் என்பதற்கு அடிமை ஆகாதவர் என்ற கருத்தில் நம்பி ஆரூரர் பாடி இருக்கலாம். பெருஞ்சொல் விளக்கனாரின் இக் கருத்துக்கள் மேலும் ஆய்வதற்குரியன. . இந்த நுணுக்கத்தை அறிய முடியாத காரணத்தால் நம்பியாண்டார் நம்பிகள் இத் தனியடியாரை இன்னார் என்று இனங்கண்டு கொள்ள முடியாத நிலையில் தொகையடியார் என்று தவறாகக் கருதிப் பாடியிருத்தல் வேண்டும். இவ்வாறு சிந்திப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. அப்படி யானால் தனியடியார் 63, தொகையடியார் 9, என்ற பழைய மரபு பற்றி வரும் எண்ணிக்கை தவறாகிவிடுமே என்று அறிஞர் வெள்ளைவாரணனார் தம் பன்னிரு திருமுறை வரலாற்றில் கூறுவது வலுவுடைய வாதமன்று. இந்த எண்ணிக்கை (63+9) எப்பொழுது வந்தது? திருவந்தாதியும் பெரியபுராணமும் தோன்றிய பிறகுதானே இந்த எண் பிரச்சனை. சுந்தரர் தொகை பாடிய பின்னர் 150 ஆண்டுகள் கழித்துத்தானே, நம்பி தோன்றித் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார். இந்த இடைக் காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும்? பெரியபுராணத்தில் சுந்தரரைச் சேர்த்துச் சேக்கிழார்தாமே பாடினார். அதற்கு முன்னர் தனியடியார் தொகை எத்துணை என்று நாட்டில் வழங்கியிருக்கும்? முதல் ஒன்பது பாடல்கள், பதினொன்றாம் பாடல் என்பவற்றைத் தனியடியார்கள் தொகையை 63 என்றுதானே கூறியிருப்பர்? ஏன் பெரிய புராணம் தோன்றுமுன்னர் இந்தத் தனியடியார் கூட்டத்தை எண்ணும் பொழுது சுந்தரரை அதிற் சேர்த்திருக்க மாட்டார்கள் அல்லவா? எனவே 63 என்றுதான் கூறி வந்திருப்பர். திருத்தொண்டத் தொகையில் உள்ளபடிக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கை. -