பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பாடல் அடியார் தனி தொகை (மொத்தக்) கணக்கு அடியார் அடியார் mm- O 女★ (GT ண் – --- "φΛΑ - 7 I 6 3 8

  • தில்லை வாழ் அந்தணர்-பாடல் தொடக்கம்

தொகை அடியார் * இப் பாடல் முதல் அடி குறிப்பிடும் பொய்அடிமை இல்லாத புலவரைத் தொகையடியார்க் கணக்கில் சேர்த்து விட்டனர். இக் கணக்கின்படிக் கண்டால் சுந்தரரைச் சேர்க்காமலும் தனியடியார் கணக்கு 63 எனவரும். சுந்தரர் தனியடியார் கணக்கில் எப்பொழுது சேர்க்கப் பெற்றார்? நம்பியாண்டார் நம்பி, தாம் பாடியவற்றையும் 11ஆம் திருமுறையில் தாமே சேர்த்துக் கொண்டார் என்று கூறுகிறவர் களைப் போலச் சுந்தரரும் தம் பெயரைத் தனியடியார் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டாரா? அவருக்குப் பின் 150 ஆண்டு கள் கழித்து நம்பியாண்டார் நம்பி தொண்டர் திருவந்தாதி பாடும் வரை 63 தனியடியார்க் கணக்கு எப்படி வந்தது? இன்று தொகையடியாரில் சேர்த்துவிடப் பெற்ற பொய்யடிமை இல்லாத புலவர் தனியடியாரில் எண்ணப் பெற்ற காரணத்தால் தான் நாயன்மார் அறுபத்து மூவர் என்ற வழக்கு சுந்தரருக்குப் பின் 150 ஆண்டுகள்வரை இருந்து வந்தது. நம்பியாண்டார் திருத் தொண்டர் திருவந்தாதி பாடுகையில் சுந்தரரையும் உடன் சேர்த்த பொழுது 63 என்ற பழைய எண் 64 ஆக உயர்ந்து