பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் § 7 3 விட்டது. ஆனால் வழக்கில் வந்து தங்கிவிட்ட 63 என்ற எண்ணை அவரால் விடவோ மாற்றவோ முடியவில்லை. ஏழாவது பாடலின் முதல் அடியில் கூறப்பெற்றுள்ள பொய்யடிமை இல்லாத புலவர் யார் என்றும் திட்டவட்டமாக நம்பிக்குத் தெரியவில்லை. எனவே அவர் குறுக்கு வழி ஒன்றைக் கடைப் பிடித்தார். பழைய 63 அடியார்க் கணக்கு மாறவும் கூடாது; சுந்தரரையும் இப்பட்டியலுக்குள் கொணரவேண்டும். இதற்கு ஒரே வழி பழைய 63 அடியார்களில் ஒருவரை (பொய்யடிமை இல்லாத புலவர்) நீக்கித் தொகையடியாருள் புகுத்திவிட்டு அந்த இடத்தில் சுந்தரரை அமர்த்திவிடுவதே ஆகும். இந்தத் திருத்தொண்டத் தொகையில், 7ஆம் பாடலின் முதலடி பழங்காலத்தில் 'புலவற்கும் அடியேன்” என்று இருந்திருத்தல் கூடும். அவ்வாறாயின் அது புலவன் என்று ஒருமைப் பொருள் தந்து நிற்கும். நம்பியின் இந்தக் கொண்டு கூட்டுக்குப் பின்னர், இந்த ஒருமை வாய்பாடாகிய 'புலவற்கும்' என்பது இடித்த காரணத்தால் எளிதாக அதனை இடையின ரகரமும் ஒற்றும் தந்து 'புலவர்க்கும்' என்று மாற்றி விட்டனர் என்று கருதத் தோன்றுகிறது. திருமுறைகண்ட புராணம் என்ற ஒன்றை ஒரு சிறிதும் ஆய்வறிவு இல்லாத ஒருவர்தம் அன்பு ஒன்றையே துணையாகக் கொண்டு பாடினார். பின்னர் வந்தவர் கள் ஆய்ந்து பாராமல் அப்படியே அதனை ஏற்றுக் கொண் டதுடன், உமாபதி சிவனார் பாடியது என்று மதிக்கத் தகுந்த ஒருவர் பெயரையும் வைத்துவிட்டனர். இத் திருமுறைகண்ட புராணத்தின்படி பார்த்தால் 11 திருமுறைகளையும் நம்பியே தொகுத்ததாகக் கொள்ள வேண்டி வரும் (பாடல்கள் 26, 27). இப் புராணப்படி நம்பி இராசராசன் காலத்தவர். நம்பிக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்து புதிய கோயில் ஒன்றைக் கட்டினான் இராசேந்திரன். அதனைப்பற்றிக் கங்கை கொண்ட சோழேச்சரப் பதிகம் ஒன்று திருவிசைப்பாவில் சேர்க்கப் பட்டுள்ளது. இதையும் நம்பி தொகுத்தார் என்று பாடும் அறியாமை மிகுந்த திருமுறைகண்ட புராணத்தை நம்பிக் கொண்டு ஆய்வாளர் ஆயத் தொடங்கினால் என்ன பயன் கிட்டும்? மரபில் பேசப் பெற்றுவந்த 63 என்ற எண்ணை மாற்ற விரும்பாமை யாலும் பொய்யடிமை இல்லாத புலவர் என்பவர் யார் என்று அறிந்து கொள்ள முடியாமையாலும் நம்பி, சுந்தரரைச் சேர்த்தால் தனியடியார் கணக்கு 64 ஆகிவிடுமே என அஞ்சிப் பொய்யடிமை இல்லாத புலவனைப் புலவராக்கித் தொகை அடியாரில் சேர்த்துவிட்டார்.