பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சேக்கிழார் இதனை அறிந்திருப்பினும் நம்பியை மறுத்துக்கூற வழி இல்லாமல் போயிற்று இந்த நிலையில் இவரது திருவந்தாதிக் குறிப்பை மீறவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் சேக்கிழார் பாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கபிலர் முதலான சங்கப் புலவர் என்று நம்பி கூறுவதைச் சேக்கிழார் ஏற்காமல் இறைவன் புகழ்பாடும் அடியவர் என்று குறிப்பாகக் கூறி விட்டுவிடுகின்றார். இவ்வாறு கூறிவிடுவதால் அடுத்துத் தொகையடியாரில் பரமனையே பாடுவார் என்று வரும் பொழுது என்ன செய்வதென்று விளங்க வில்லை. இந்த இடர்ப்பாட்டை நீக்கும் வகையில் புலவர் என்ற சொல் வரும் பகுதிக்கு விளக்கம் தருபவர் போலக் கவிஞர், 'செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பலநோக்கும் மெய்யுணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர் மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார் பொய்யடிமை இல்லாத புலவர் எனப் புகழ்மிக்கார்' " என்று பாடி முடிக்கின்றார். பரமனையே பாடுவார் என்ற பகுதியில் வடமொழி, தென்மொழி இரண்டாலும் இறைவனைப் பாடுபவர் என்று முடித்து விடுகின்றார். மேலும் தொகையடியார்பற்றிக் கூறும் திருத்தொண்டத் தொகையின் 10ஆம் பாடலிற் கூறப்பெற்ற கருத்தை நம்பி கண்டவாறே சேக்கிழார் காண்கிறாரா? என்ற ஐயம் எழாமல் இல்லை. சுந்தரர் இப் பாடலைப் பாடும்பொழுது இரண்டு எண்ணங்கள் அவர் மனத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழகத் தில் ஓங்கி வளர்ந்துள்ள சைவ சமயம், உலகம் முழுவதும் மானிட இனத்தைப் பற்றி நின்ற இறையுணர்வு, என்ற இரண்டும் அவருடைய எண்ண ஓட்டத்தில் இருந்தன என்று கூறுவதில் தவறு இல்லை. 1. பத்தராய்ப் பணிவார்கள் 2. பரமனையே பாடுவார் 3. அப்பாலும் அடிச்சார்ந்தார் என்ற இம் மூன்று தொகையினரும் காலம், இடம் என்ப வற்றைக் கடந்து நிற்கும் தொண்டர்களாவார்கள். இந்த