பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 675 மூன்று குறிப்புக்களிலும் சிவபெருமான் பற்றிய பேச்சே இல்லை. பரம்பொருள் என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதனிடம் அன்பு செய்தல் மக்களாகப் பிறந்தவர்கள் கடன் என்பதை ஏற்றுக்கொள்பவர் யாவராயினும் அவர்களையும் வகைப்படுத்தித் தொகைப்படுத்தி அவர்கட்கும் அடியேன் என்கிறார் சுந்தரர். அறுபதுபேர் சிவனடியார்கள் பெயர்களை வரிசைப்படுத்திக் கூறி அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடியேன் என்று கூறிவிட்டு மறுபடியும் 'பத்தராய்ப் பணிவார்கள்' என்று வேறுபடுத்திக் கூறுவதன் கருத்தைச் சிந்திக்க வேண்டும். தனியடியார்கள் அனைவரும் 'பத்தராய்ப் பணிவார்கள் என்ற தலைப்பினுள் அடங்கிவிடுவர் அல்லரோ? அப்படி இருக்க மறுபடி யும் 'பத்தராய்ப் பணிவார்' என்று கூறுவது வேண்ட்ா கூறலாகும். அப்படி இருந்தும் இறையருள் பெற்ற சுந்தரர் போன்றோர், இவ்வாறு பாடினால் அதற்குத் தனியே ஏதாவதொரு பொருள் இருத்தல் வேண்டும். அந்த நுணுக்கத்தைச் சிந்தித்த்ால் இங்குக் கூறப்பெற்றவர்கள் தவிர, இவர்கள்போன்ற பக்தர்கள் யாவரா யினும் அவர்கட்கெல்லாம் அடியேன் என்று கூறுகிறார் பெரியார் என்பது விளங்கும். அவ்வாறு கூறும்பொழுது சைவம் என்ற கூட்டினுள் அடங்காதவர்களையும், இறைவனை வேறு பெயர் கொண்டு அழைத்து அவன்மாட்டுப் பக்தி செலுத்துகின்றவர் களையும் குறிப்பிடுகின்றார் என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதேபோல இறைவன் புகழைப் பாடுகின்றவர் யாவரா யினும் அவர்கட்கும் அடியேன் என்று கூறுகின்றார். இவ்விரண்டு அடிகளாலும் குறிக்கப்படுபவர் சிவனடியார்தாம் என்று அறுதியிட்டுக் கூற எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் வழி நுால் செய்த நம்பிகள் இங்கும் குழப்பம் செய்கின்றார். பத்தராய்ப் பணிவார்கள் யார் என்று கூறவந்த நம்பி, 'அரசினை ஆரூர் அமரர்.பிரானை அடிபணிந்திட்டு உரை செய்த வாய்தடுமாறி உரோமபுளகம் வந்து கரசரணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி சொரி தரும் அங்கத்தினோர் பத்தர் என்று தொகுத்தவரே ' என்றும், அடுத்துள்ள பரமனையே பாடுவார். 'வகுத்த மதில் தில்லை அம்பலத்தான் மலர்ப்பாதங்கள்மேல் - உகுத்த மனத்தொடும் பாடவல்லோர் என்பர் உத்தமரே "