பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்றும் பாடி விடுகின்றார். பத்தராய்ப் பணிவார்கள் திருவாரூரில் உள்ள பெருமானை வணங்குகிறவர்கள் என்றும், பரமனையே பாடுபவர் தில்லையம்பலத்தானைப் பாடுகிறவர்கள் என்றும் கூறிவிடுகிறார். மூன்றாவதாக உள்ள அப்பாலும் அடிச் சார்ந்தார் பற்றிக் கூறவந்த நம்பி, 'வருக்கம் அடைந்துநன் நாவலூர் மன்னவன் வண் தமிழால் பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடி பெய்கழற்கே ஒருக்கு மனத்தொடு அப்பாலடிச் சார்ந்தவர் என்றுலகில் தெரிக்குமவர் சிவன் பல்கணத்தோர் நம் செழுந்தவரே "' என்றும் பாடி விடுகின்றார். இம் மூன்று பாடல்களும் திருநாவலுரருடைய விரிந்த மனப் பான்மையை அறிந்து பாடியதாக இல்லை. ஆனாலும் நம்பி பாடிச் சென்ற கருத்தைக் கூடுமானவரை அடியொற்றிச் செல்ல வேண்டும் எனக் கருதும் சேக்கிழார், இவற்றை அடியொற்றிப் பாடவேண்டியவராகிறார். சுந்தரரின் விரிந்த மனப்பான்மையை யும், பொதுவான கருத்துக்களையும் சேக்கிழார் அறியாமல் இருந்திருக்க முடியாது. என்றாலும் 'பத்தராய்ப் பணிவார்கள்' என்ற கூட்டத்தாரைச் சிவனை வழிபடும் சிவனடியார்களாகவே தான் சேக்கிழார் கூறுகிறார். பத்தராய்ப் பணிபவர்பற்றிக் கூறும் பாடல்கள் எட்டு உள்ளன. ஏழாவது பாடல், - 'மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்' " என்று கூறி முடித்துவிட்ட பிறகு எட்டாவது பாடல் 'சங்கரனுக்கு ஆளான தவம் காட்டித் தாமதனால் பங்கமறப் பயன் துய்யார்; படி விளங்கும் பெருமையினார் அங் கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் பொங்கி எழுஞ்சித்தமுடன் பத்தராய்ப் போற்றுவார். ' என்ற முறையில் அமைந்துள்ளது. ஏழாவது பாடல் முடியும் பொழுது சேக்கிழார் கூறி முடித்துவிட்டார் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த ஏழு பாடல்களிலும் ஓர் இடத்தில்கூடத் திருவாரூர்பற்றிய குறிப்பே இல்லை. பக்தர்கள் திருவாரூர்ப் பருமானை வணங்க வேண்டும் என்று கூறினால், ஏனைய ஊர்