பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 67 7 W களிலுள்ள பெருமானை வணங்குபவர்கள் பத்தரல்லர் என்றாகி விடுமே! ஆனால் நம்பி தம் திருவந்தாதியில் அவ்வாறுதான் கூறியுள்ளார். இவ்வாறு கூறுவதால் விளையும் இடர்ப்பாட்டை அறிந்த சேக்கிழார் பொதுவாகப் பத்தர்கள்பற்றிக் கூறித் திருவாரூரைக் குறிக்காமல் விட்டுவிட்டார். ஆனால் நம்பி கூறியதை விட்டு விட்டாரே என வருந்திய பிற்காலச் சைவ அன்பர்கள் திருவாரூரைக் குறிப்பிட்டு ஒரு பாடலைப் பாடி எட்டாவது பாடலாக அதனைச் சேர்த்துவிட்டனர் என்று கருத வேண்டியுள்ளது. பெரியபுராணத்திலும் இடைச் செருகல் இல்லாமல் இல்லை. பத்தராய்ப் பணிபவர்பற்றி இந்த முறையில் எட்டுப் பாடல் பாடிவிட்டாலும் சுந்தரரின் விரிந்த மனப்பான்மையை அறிந் திருந்த சேக்கிழார் அதனைவிட்டு விடவோ, மறக்கவோ விரும்ப வில்லை என்றுதான் தோன்றுகிறது. எனவே அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணத்தில் இக் கருத்தை ஒரளவு வெளியிடுகின்றார். சுந்தரர் 'அப்பாலும் அடிச் சார்ந்தார்' என்று கூறும் பொழுது காலம், தேசம் இடையிட்ட அன்பர்கள் யாவராயினும் இறைவன் ஒருவன் உண்டு என்ற கொள்கை உடையவராய் அவனைச் சரணம் என்று அடைபவர் யாவராயினும் அவர்கட்கும் அடியேன் என்றுதான் கூறுகிறார். இந்த அருமைப்பாட்டை நம்பி அறிய வில்லை; ஆனால் சேக்கிழார் அறிகிறார். நம்பி இதனை அறிய முடியாமையின் திருத்தொண்டத் தொகையில் இடம் பெறாத சிவனடியார்கள் என்று பாடிவிடுகிறார். சேக்கிழார் இந்த விரிந்த மனப்பான்மையை அறிந்திருந்தும் ஒரளவு அதனை வெளிப்படுத்தி விட்டு நம்பியைப் பின் தொடர்ந்து சிவனடியார் என்று பாட்டை முடிக்கின்றார். 'மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமையோரும் நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும் நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும் பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் கடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சேவேந்து வெல் கொடியான் அடிச் சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே ! என்று கூறுகையில் தமிழ் வழங்கு நாட்டுக்கப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமையோர் என்ற பகுதியில் நம்பியாரூரரின் விரிந்த மனப்பான்மையை அறிவித்து விடுகின்றார். முதல்வனார் என்ற சொல்லால் பரம்பொருள் என்ற கருத்தை அறிவிப்பதன் 6