பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 78 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மூலம் சைவம் என்ற வ்ட்டத்தை விட்டு வெளியே உள்ளவர்களை யும் உளப்படுத்திக் கூறுகின்றார் என்பதை அறிய முடிகின்றது. என்றாலும் இரண்டாவது அடி முதல் நான்காவது அடிவரைச் சைவ சமய அடியார்களையும் சிவபெருமானையும் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்குச் சேக்கிழாரைக் குறை கூறத் தேவை இல்லை. தொண்டர்கள் பெருமையைக் கூறவந்தார் என்பது பொதுக் கருத்தாயினும், சிவத்தொண்டர்கள் பற்றிச் சிறப்பாகக் குறிப்பதுவே அவருடைய நோக்கம் என்பதையும் மறந்து விடலாகாது. எனவே இந்த ஒரு பாடலில் சைவம் என்ற வட்டத் தின் வெளியே உள்ள தொண்டர்களை ஒரடியில் குறிப்பிட்டுவிட்டு அந்த வட்டத்தின் உள்ளே உள்ளவர்களை அதாவது சுந்தரர் கூறும் அடியார்கட்கு முன்னர் வாழ்ந்தவர்களையும் பின்னே வாழப் போகின்றவர்களையும் குறிக்கின்றார். சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலும் இடைச் செருகல் உண்டு என்று பல காலமாகவே கருதப்பட்டு வந்துளது. இது உண்மை என்பதை அறிய 'முழு நீறு பூசிய முனிவர் புராணத்தை ஒருமுறை காண்டல் போதுமானது ஆகும். சுந்தரரின் இந்த ஒர் அடிக்கு விளக்கம் கூறவந்த நம்பிகள், 'உலகுகலங்கினும் ஊழிதிரியினும் உள்ளொருகால் விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண் அலகில் பெருங்குணத்து ஆகுர் அமர்ந்த் அரனடிக் கீழ் இலகு வெண்ணிறு தம் மேனிக் கணியும் இறைவர்களே' " என்று பொதுப்படையாகக் கூறிச் சென்றுவிட்டார். இதிற் கூறப் பெற்றவர்கள் எங்கிருந்தாலும் திருநீறணிபவர்கள் என்ற துண்மையான கருத்தை வாங்கிக் கொள்ளாமல் ஆரூர் அமர்ந்த அரனடிக் கன்புடையார் என்றே நம்பி பாடியுள்ளார். ஆனால் திருநீறு பூசும் தொண்டர்கள் என்ற கருத்தைக்கூறும் இந்த ஓர் அடிக்கு விளக்கம் கூறுவதுபோலப் பெரியபுராணத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. ஆறாவது பாடல் மட்டும் பொது வாகப் பேசுகின்றது. அதுமட்டுமே சேக்கிழார் பாடலாக இருத்தல் கூடும். அவர் வாழ்ந்த பன்னிரண்டாம் நூற்றாண்டில் நாட்டு வழக்கில் இல்லாத பல கருத்துக்கள் முதல் ஐந்து பாடல் களிற் பேசப்பெறுகின்றன. - - முதற் பாடலில் கற்பம், அநுகற்பம், உபகற்பம் என்பவை குறிப்பிடப்படுகின்றன.