பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 67 9 இரண்டாவது பாடலில் அநாமயம், சிவாங்கி, கற்பம் என்ற திருநீறு செய்யும் விதங்கள் பேசப்படுகின்றன. மூன்றாம் பாடலில் அத்திர மந்திரம், ஒம நெருப்பு, அநுகற்பத் திருநீறு செய்யும் விதம் என்பவை பேசப்படுகின்றன. நான்காம் பாடல் உபகற்பத் திருநீறு செய்யும் விதம் கூறுகிறது. இவை அனைத்தையும்விட ஐந்தாம் பாடல் இன்னும் வியப்பானது. - 'இந்தவகையால் அமைத்தநீறு கொண்டே இருதிறமும் சுத்திவரத் தெறித்த பின்னர் அந்தமிலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குருநன்மை அல்லாப் பூமி முந்த எதிர் அணியாதே அணியும்போது முழுவதும் மெய்ப்புண்டரஞ் சந்திரனிற் பாதி நந்தினரி தீபநிகழ் வட்டமாக நாதரடியார் அணிவர் நன்மையாலே " என்ற இந்தப் பாடலைப் படிக்கும்போதே இது சேக்கிழார் வாக்கன்று என்பதை எளிதில் அறிய முடியும். அர்த்த சந்திர வடிவில் கேரளத்தார் சந்தனம் இடுவதுபோல விபூதி அணியலாம் என்றும் இப்பாடல் கூறுவதை நோக்க இந்த ஐந்து பாடல்களும் ஐந்நூறு ஆண்டுகளிற் பிற்பட்டே செருகுற்றன என்று துணிய லாம். பெரியபுராணத்துக்குக் குறிப்புரை வகுத்த தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள், இந்த ஐந்து பாடல்களும் பல ஏடுகளிற் காணப்படவில்லை. இவை இடைச் செருகல் என்று தம் நூலில் குறித்துள்ளார்கள். ' - . இதுவரைக் கண்டவற்றிலிருந்து 'பொய்யடிமை இல்லாத புலவர்' என்ற தொடர்க்கு நம்பியின் பொருளைச் சேக்கிழார் ஏற்கவில்லை என்பதும், ஆனாலும் அவருக்கு எதிராக வேறு கூறவும் துணியவில்லை என்பதும் விளங்கக் காணலாம். 4.5