பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ვ 7 7 முழுவதையும் கருத்துட் கொண்டு முரண்பாடுகள், விடுபாடுகள் (Omissions) என்பவை நுழைந்து விடாமல் பார்த்துக்கொள்கின்றனர். இவற்றை அல்லாமல் காப்பிய வரைவில் (Epic Design) உள்ளார்ந்த ஒருமைப் பாடு இருக்கும் படியாகவும் கவனித்துக் கொள்ள வேண்டும். 3. தொடர் அடுக்குகளை வாய்மொழிக் கவிஞன் பயன் படுத்துகையில் அதில் ஏதும் மாற்றம் செய்ய அவனுக்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் இல்லை. கதிரவன் உதயம் கதிரவன் மறைவு போன்ற அனைவருக்கும் தெரிந்த நிகழ்ச்சிகளை வருணிக்கும் பொழுது எத்துணை விதமான மாற்றங்களையும் கற்பனையையும் கைக் கொள்கிறான் என்பதை அறிய முடிகிறது. 4. பாத்திரங்களின் இடையே உரையாடல் நிகழும் பொழுதும் பழைய வாய் மொழிக் கவிதைகளிலிருந்து இலக்கியம் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண முடிகிறது. 5. எழுத்திலக்கியப் படைப்பாளி, தான் படைக்கும் இலக்கியத்தைக் கற்பார் கண், செவி என்பவற்றின் உதவியுடன் அமைதியான சூழ்நிலையில் கற்கிறார்கள்; கற்று அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்துள்ளா னாதலின் அவன் அடைகளைத் திரும்பத் திரும்ப வாய்ப் பாட்டு முறையில் பயன்படுத்தாமல் மாற்றத்தின் மூலம் இன்பந்தர முயல்கின்றான். 6. காப்பிய ஆசிரியன் தன் கவிதையில் தோன்றும் ஒவ்வொரு அடியையும், அவ்வடியில் வரும் சொல்லை யும் நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுத்துப் பயன் படுத்து கிறான். அந்தச் சொற்கள் கருத்தாழம் உடையனவாய்த் தன்னைக் கற்பார் சிந்தனை விரிந்து செல்லும் அளவிற்குப் பொருளாழம் உடையனவாய் அமைக்கப் படுகின்றன. 7. எழுத்தில் தோன்றும் காப்பியம் தனக்கே உரிய தனி அமைப்பை மேற்கொள்ளுதலாலும், பொருத்தமான இடத்தில் கருத்தாழம் உடைய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தலினாலும், குறிப்பினால் பல்வேறு பொருள்களை உணர்த்தும் தொடர்களைத் தன்னகத்தே பெற்றிருத்தலினாலும் வேண்டுமான