பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புலமை நயம் பிறகாப்பியப் புலவருடன் சேக்கிழாரை ஒப்பிடுதல் கூடாது-காரணங்கள் தமிழில் காப்பியங்கள் இயற்றிய கவிஞர்கள் அனைவருமே ஒப்பற்ற புலமை பெற்றிருந்தவர்தாம் என்பதில் ஐயமில்லை. காப்பிய அழகுகள் எனப்படுபவற்றில் பெரும் பகுதி இல்லாமல் நிற்கும் மணிமேகலைகூட, அதனை இயற்றிய புலவனின் ஆற்றலைச் சில இடங்களிற் காட்டி நிற்கின்றது. ஆசிரிய நடையில் அமைந்த சிலம்பு, மேகலை, பெருங்கதை என்பவை ஒருபுறம் இருக்கப் புதியதாகப் புகுந்த விருத்தப்பாவில் அமைந்த சூளாமணி, சிந்தாமணி, இராமாயணம் என்பவை சேக்கிழாருக்கு முன்னரே தமிழில் தோன்றியவை. சொல் ஆட்சி, ஒசை நயம், கற்பனை, வருணனை, உவமை கள் என்பவற்றுடன் காப்பியம் முழுவதையும் காணும்பொழுது அது காட்டும் கோலம் என்பவை அந்த அந்தக் கவிஞனு டைய திறத்தைப் பொறுத்துச் சிறப்புப் பெறும். மேலே கூறப் பெற்ற காப்பியங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கண்டால் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கம்பநாடன் விளங்குவதைக் காண முடியும். அவனுக்கு அடுத்த இடம் சேக்கிழாருக்கே உரியதாகும். பல இடங்களில் கம்பனை ஒத்த நிலையில் இவருடைய பாடல்கள் அமைந்தாலும் அவனுக்குக் கிடைத்தது போன்று ஒரு கதை இவருக்குக் கிடைக்கவில்லை. அன்றியும் காப்பியம் சிறந்ததாக அமைய வேண்டும் என்ற குறிக் கோளுடன் பாடியவன் கம்பநாடன், காப்பியம் எவ்வாறு இருந் தாலும் அது மக்கள் மனத்தைத் திருப்ப உதவ வேண்டும் என்பதே சேக்கிழாரின் குறிக்கோளாகும். 'புலனடக்கம்' என்பது மனித சமுதாயம் முன்னேற ஒரே வழியாகும் என்பதைக் காப்பியத்தின் பாவிகமாகக் கம்பன் வைத்திருந்தாலும் காப்பியம், இலக்கியமாக விளங்க வேண்டும் என்பதே அவன் தலையாய குறிக்கோளாகும். காப்பியத்தைக் கருவியாகக்கொண்டு, தளர்ந்திருந்த் தமிழ்.