பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 6 & 3 மக்கள், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழுமாறு செய்வதே சேக்கிழாரின் குறிக்கோளாகும். எனவே இவரை மற்றைக் காப்பியக் கலைஞர்களுடன் ஒப்பிடுவது முறையன்று. பெருங்காப்பியம் பாட வாய்ப்பில்லாத 'தொண்டு என்னும் பண்பைக் காப்பியப் பொருளாக வைத்துக் கொண்டு 6.3 உதிரிக் கதைகளையும் வைத்துக் கொண்டு இவ்வளவு சிறந்த முறையில் அவர் காப்பியம் அமைத்ததே செயற்கருஞ் செயலாகும். இவருடைய காப்பியத்தின் பாவிகம் என்று ஏதாவது ஒன்றைக் கூறவேண்டுமானால் தொண்டில் விளைந்த வீரம் என்று கூறலாம். மேலும் அதற்கு முன்னர் வீரம் என்பதற்குத் தரப்பெற்ற பொருளை மாற்றி, மனத்துணிவும், துயர் பொறுத்தலும், தொண்டு செய்தலுமே வீரம் எனப் புதுக் கொள்கை வகுக்கத் தொடங்குகிறார் இந்த ஆசிரியர். 'சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது" என்று கவிச்சக்கரவர்த்தி பாரதி பாடியதற்கு இலக்கணமாய் விளங்குவது பெரியபுராணம். பிற காப்பியங்கள், பலருக்கும் அறிமுகமான எட்டுச் சுவைகளையே மிகுத்துப் பாடவும், பலரும் அறிந்துகொள்ளாத பக்திச் சுவையை இக் கலைஞர் பெரிதுபடுத்திப் பாடினார். ஏனைய காப்பியப் புலவர்கள் தாம் எடுத்துக்கொண்ட பொருளால், தம் விருப்பம் போல் கற்பனையை வளர்க்கவும் பாடவும் முடிந்தது. அவற்றினும் மாறுபட்ட இது வரலாற்றுக் காப்பியம் ஆகலின் சேக்கிழாருக்கு இதனையும் கட்டுக்குட்பட்ட தாகவே பாடவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. பாத்திரங் களின் செயல்களையும் கதை நிகழ்ச்சிகளையும் இவருடைய விருப்பம் போல் பாட முடியாத சூழ்நிலை, எனவே இத்தனை கட்டுப்பாடுகள், விரிந்து கொடுக்காத கதை, வரலாற்றை மீறவோ மாற்றவோ முடியாத சூழ்நிலை என்பவற்றின் உள்ளே நின்று ஒரு காப்பியம் பாடும் நிலை சேக்கிழார் ஒருவருக்குத்தான் இருந்தது. உலக இலக்கியங்களுள் வேறு எந்தக் கவிஞனுக்குக்கும் இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டதில்லை. எனவே காப்பியப் புலவர் என்ற வகையில் அவரை எடையிடும் பொழுது இந்த இடையூறு களை எல்லாம் மனத்தில் இருத்திக்கொண்டு காண்டல் வேண்டும். - தம் காப்பியப் பொருளில் உள்ள இடையூறுகளை நன்கு அறிந்தும் அதனையே தேர்ந்தெடுத்தார் இத்தனை இடையூறுகளையும் அவர் முன்னரே அறிந்திருந் தார் என்பதிலும் ஐயமில்லை. முன்பின் யோசியாமல் தொடங்கி