பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் - - 685 யும், வடமொழி நூல்களையும் இவர் கற்றிருந்தார் என்று உறுதி யாகக் கூறலாம். - தொல்காப்பியம், சங்கப் பாடல்கள் என்பவற்றில் இவர் கொண்ட ஈடுபாடும், திருமுறைகளில் இவருக்கிருந்த பக்தி யுடன் கூடிய ஈடுபாடும் எத்தகையன? அப் பாடல்களை எத்துணை அளவு இப் புலவர் பெருமான் எடுத்து ஆண்டுள்ளார் என்பன போன்ற பகுதிகளைப் பெரும் புலவர் திரு.க. வெள்ளைவாரணனார் தம் பன்னிரு திருமுறை வரலாறு (பகுதி II) நூலில் மிக விரிவாகப் பேசி இருத்தலின் ஈண்டு அவற்றை மறுபடியுங் கூறத் தேவை இல்லை. காப்பியத்தில் புகுத்திய புதுமைகள்; உயர்வு நவிற்சி அணிக்கு அதிக இடம் தராமல் பாடியது சேக்கிழார் தாம் பாடிய புராணத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார். உயர்வு நவிற்சி அணி அதுவரை காப்பியங்களில் செலுத்தி வந்த ஆட்சிக்கு ஒரளவு விடை கொடுத்து, இயல்பு நவிற்சியணிக்கு அதிகச் சிறப்புக் கொடுத்தார். மேட்டுக்குடி மக்களின் இடம், வாழ்வு என்பவற்றை வருணிக்கத் தேவைப்படும் இடங்களில் ஏதோ வேண்டா வெறுப்பாகச் சிறிய அளவில் வருணனைகளை முடித்துவிட்டுச் சாதாரண மக்கள், ஏழைகள் வாழும் பகுதிகளை வருணிக்க நேர்ந்தால் அதிக இடம் கொடுத்து இவர் பாடுவது புதுமை. - - நின்ற சீர் நெடுமாறன், புகழ்ச்சோழர், சேரமான் பெருமாள் போன்ற அரசர்களைப் பேசவேண்டிய இடங்கள் அனைத்திலும் அவர்களுடைய அரச வாழ்வு, அரசச் செல்வம் என்பவைபற்றி ஏதோ கூற வேண்டுமே என்ற கருத்தில் கூறுபவர் போலவே பாடிச் செல்கிறார். நெடுமாறன் பாண்டியனாகையால் அவனுடைய முன்னோர்களுள் ஒருவராகிய உக்கிரகுமார பாண்டியர் இந்திரனை வென்றதைக் குறிப்பிடும் முறையில், 'சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட பொன்னாரம் அணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார். ' என்று குடிப் பெருமை கூறிவிட்டு அடுத்தபடி,