பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 8 6 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளம் காயுமதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்." என்ற முறையில் நெல்வேலிப் போரை நான்கு பாடல்களிற் பாடுதல் புதுமையாகும். மேலும், 'முனையழிந்த வடபுலத்து முதல் மன்னர் படை சரிய' என்று கூறி இவனை எதிர்த்தவர்கள் யார் என்பதையும் குறிப்பாகத் தெரிவிக்கின்றார். இந்தக் குறிப்பும் ஏன் பாடப் பெற்றது என்று சிந்தித்தால் முதல் நூல் செய்த சுந்தரர் இந்தப் பட்டத்தை நெடுமாறனுக்கு வழங்கியது நினைவில் வரும். - - - - - - - - - * - - 'நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரரே இச் செயலைச் சிறப்பித்துப் பாடிவிட்டமையின் காப்பியக் கவிஞர் இதனை விரித்துரைத்தல் வேண்டும் என்று விரும்பியதாகக் கருத இடமுண்டு. - இதேபோன்று அதியன் என்பவனைப் புகழ்ச் சோழனுடைய படைசென்று எதிர்த்துச் செய்த போரின் பெருமையைப் பதினைந்து பாடல்களில் பாடுகின்றார். இதற்கும் ஒரு காரணம் உண்டு இத்தகைய கடுமையான போரில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சடைத்தலைத் துறவி கொல்லப்பட்டதில் வியப்பு ஒன்றும் இருத்தற்கில்லை. என்றாலும் அத்தலையைச் சிவனடியார் தலை என்று கருதிய புகழ்ச் சோழர் தீப்பாய்கின்றார். அமைதி கூறக் கூடிய தினையளவு குற்றம் ஆயினும் புகழ்ச் சோழர் அதனைப் பனையளவு குற்றமாகக் கொண்டு உயிர் துறந்தார் என்பதைக் காட்டவே அத்துணை விரிவாகப் போர்க்களம் பாடினார். 4 அரசர்கள் செய்கின்ற போரை ஏனைய காப்பியக் கவிஞர்கள் போல இவரும் விரிவாகப் பாட நினைத்திருந்தால் சாளுக்கியப் புலிகேசியைப் பரஞ்சோதியார், நரசிம்மபல்லவன் என்பவர்கள் போரிட்டு முறியடித்ததைப் பாடியிருக்கலாம். அவ்வாறு அவர் எண்ணவில்லை என்பதைக் காட்டவே இந்த எடுத்துக்காட்டுக்கள் தரப் பெற்றுள்ளன. இனி இவர் நிலைக்களம் அமைத்துக் கற்பனை கலந்த வருணனை பாடுவதில் வல்லவர் என்பதையும் காணலாம். சூழ்நிலை அமைப்பதில் ஈடு இணை இல்லாதவர் ஒரு காப்பியத்தில் அந்தக் காப்பியத் தலைவன் ஒரு குறிப்பிட்ட நாட்டிற் பிறந்தான் என்று கூறவரும் கவிஞ்ன்