பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் - 687 அதற்குரிய தக்க நிலைக்களம் அமைத்துக் கொண்டு பாடுதல் இயல்பேயாகும். அந்தத் தலைவன் எதிற் சிறப்புற்று விளங்கப் போகிறானோ அதே இயல்பு அந்த நாட்டில் பல்கி இருந்தது என்று கூறுதல் இயல்பாகும். சூழ்நிலை அமைப்பு எனப் பெறும் இதனைப் பொருத்தமான அடித்தள அமைப்பு (Proper Background) என்றும் கூறுவர். ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை மிகுதியும் பெற்று விளங்கும் தலைவன் அந்த நாட்டில் தோன்றி னான் என்று கவிஞன் கூறவரும்பொழுது அது இயல்புதானே என்ற எண்ணம் கற்பார் மனத்தில் தோன்றுமாறு அமைக்க வேண்டும். பெரும்பாலும் எல்லாக் கவிஞர்களும் இதனை ஒரளவு கொண்டு செலுத்துகின்றனர் என்றே கூறலாம். சிந்தாமணியின் காப்பிய நாயகன், தந்தை இழந்த அரசைப் பிறர் உதவிகொண்டு பெறப் போகிறவன். எனவே அவன் பிறக்கப் போகும் நாட்டைப் பற்றிக் கூறவந்த கவிஞர், நற்றவம் செய்வார்க்கிடம்; தவஞ்செய்வார்க்கும் அஃதிடம் நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள் செய்வார்க்கிடம் " என்று பாடுதலைக் காண்கின்றோம். இத்தகைய ஒரு நாட்டில் தன்வலி, துணைவலி என்று இரண்டையும் சேகரித்துப் பகைவனை அழிக்க வேண்டும் என்று நினைப்பவன் பொன்னைச் சேகரம் செய்யவேண்டும் என்று கூறத் தேவை இல்லை. எனவேதான் பொருள் செய்வார்க்கும் அந்நாடு இடமாயிற்று என்று கூறுகிறார். கம்பநாடனின் காப்பிய நாயகன் ஈடு இணையற்ற மன்னன்; ஒருத்தியுடன் வாழ்வதே இன்பம் என்று நினைப்பவன்; தந்தை யினும் மாறுபட்ட வாழ்வை நடத்தியவன். எனவே அவனுடைய நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெறுகிறது. புலனடக்கம், நல்லொழுக்கம் என்பவற்றின் உறைவிடமாய, அறத்தின் மூர்த்தியாய, ஒருவன் தோன்றப் போகும் நாட்டைக் கூற வருகின்றான் கவிஞன். என்றாலும் முதற்பாடல் அவனுடைய காப்பியத் தலைவனின் பண்பாட்டைக் கூறுவதுபோல அமைந் துள்ளமை காணலாம். 'ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் காசு அலம்பும் முலையவர் கண் எனும் பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக் - - ... • ? கோசலம் புனை நாட்டணி கூறுவாம்