பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 88 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்று தொடங்கும் அவனுடைய இப் பாடலில் தன் காப்பியத் தின் உள்ளீடு எதுவாக இருக்கும் என்பதையும் நுண்மையாகச் கூறிச் செல்கிறான். இதே போன்று சேக்கிழாரும் தம் காப்பியத்தின் முதற் பாடலில் கயிலை மலையை வருணிக்கப் புகுகின்றார். 'பொன்னின் வெண்திரு நீறுபுனைந்தெனத் தன்னை யார்க்கும் அறிவரி யான் என்றும் மன்னி வாழ்கவி லைத்திரு மாமலை 8 என்ற இப் பாடலைப் படித்தவுடன் 'தன்னை யாரும் அறிவரியானு டைய சிறப்பு' தனைக் கூறும் காப்பியம் என்பதை நுண்மையாக அறியுமாறு செய்கின்றார். நாட்டு வருணனை ஆற்று வருணனை என்பவற்றில்கூடப் பக்திச் சுவையைப் புகுத்திப் பாடியவர் இனிக் காப்பியப் புலவர்கள் அனைவரும் ஆற்று வளம், நாட்டு வளம், நகர் வளம் என்பவற்றைப் பற்றிக் கூறல் மரபேயாயினும் அவ்வாறு கூறும் பாடல்களைக் கொண்டே அக் கவிஞனுடைய அகமன வளர்ச்சியையும் சிந்தனை ஒட்டத்தையும் கண்டு கொள்ள முடியும். ஆறு, நாடு. ஊர் என்பவற்றை வருணிக்கும் பொழுது அந்தப் புலவனுடைய கற்பனைக்கு வடிவு கொடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அக் கற்பனை அவனுடைய அடிமனத்தில் எது நிறைந்துள்ளதோ, அதன் அடிப்படையில்தான் பிறக்க முடியும். 'சரயு என்பது தாய் முலை அன்னது இவ் உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம்.'" என்றும், 'சான்றோர் கவி எனக் கிடந்த கோதவரி' " என்றும் கம்பன் ஆற்றினை வருணிப்பான். அன்றியும் ஆற்றில் வெள்ளம் பெருகுதலைக் கூறவந்த கம்பநாடன், மானம் நேர்ந்து, களம்நோக்கி, மனுநெறி போன தண்குடை வேந்தன் புகழ் என ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத் தானம் என்னத் தழைத்தது நீத்தமே. '