பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 6 8 Ꮽ என்றும் பேசுகிறான். ஆற்றின் பெருக்கத்தை நினைக்கும் கவிஞனுக்கு வேந்தன் புகழும், நான்மறையாளர்க்கு ஈந்த தானமும் நினைவிற்கு வருகின்றன. அவனுடைய காப்பியப் பொருளுக்கேற்ப அவனுடைய கற்பனை விரிதலைக் காண முடிகிறது. ‘விடில் பட்டினம் வெளவிய வேந்தெனக் காடு கையரிக் கொண்டு கவர்ந்துபோய் மோடு கொள்புனல் மூரிநெ டுங்கடல் நாடு முற்றிய தோவென நண்ணிற்றே. * என்பது சிந்தாமணியாசிரியராகிய திருத்தக்க தேவரின் கற்பனை யாகும். அவருடைய காப்பிய நாயகன் வாழப்போகும் வகையை நுண்மையாக அறிவிக்கின்றது அவருடைய கற்பனை. முன்னர்க் குறிப்பிட்டபடிச் சேக்கிழார், மரபுபற்றிய இத்தகைய வருணனைகளில் கூடத் தமக்கெனத் தனிவழி வகுத்துக் கொண்டவராவார். அவருடைய கற்பனையில் ஆறு இறைவனும் இறைவியுமாகவே காட்சி நல்குகிறது. ‘மாலின் உந்திச் சுழி மலர்தன் மேல் வருஞ் சால்பினால், பல்லுயிர் தருதல் மாண்பினால், கோலநற் குண்டிகை தாங்கும் கொள்கையால், போலும் நான் முகனையும் பொன்னி மாநதி' 'வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால் எண்ணில்பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. 'வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால் என்ற பாடல்களில் வரும் கற்பனைகள் அவருடைய அக மன ஆழத்தில் ஒடும் எண்ண ஓட்டங்களைக் காட்டுவதுடன் கற்பார் மனத்திலும் இறையுணர்வைத் தோற்றுவிப்பதை யாரும் அறிய முடிகின்றது. கற்பனை கலந்த வருணனை செய்வதில், பல சமயங் களில் அளவு மீறிய கற்பனையால் மெய்ம்மைக்கு மாறாகச் சென்றுவிடும் இயல்பைப் பல கவிஞர்களிடமும் காணலாம். கற்பனை என்று கூறிவிட்ட பின் அதற்கு அளவும் வரம்பும்