பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 8 பெரியபுராணம்- ஒர் ஆய்வு I 0. இடங்களில் பல்வேறு பகுதிகளாகப் பிரிவினை செய்யப் படுதலினாலும் சிறக்கின்றது. எழுத்தில் தோன்றும் காப்பியத்தில், காப்பியத்தின் மொத்த அமைப்பில் ஈடுபடாமல் ஒவ்வொரு பகுதியின் விரிவான விளக்கத்திலும் தனியான சொற்களும் தொடர்களும் நம்முள் எழுப்புகின்ற உணர்ச்சிப் பெருக்கிலும் ஈடுபடுகிறோம். இலக்கியக் காப்பிய ஆசிரியர்கள் தாம் கூற வந்த நிகழ்ச்சி நடந்து பலகாலம் கழித்து, அந்த நிகழ்ச்சியைத் தம் அறிவுக்கண் கொண்டு காண்கின்றனர். கதை நிகழ்ச்சிகள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் - காணப்படுகிற நிகழ்ச்சிகள் அல்ல எனவே தாம் அறிவின் துணை கொண்டு கண்ட காட்சியைத் தேர்ந்தெடுத்த சொற்களின் மூலமே அவர்கள் நமக்கு அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. இப்பாடல்கள் இயற்றிய ஆசிரியனால் நேரில் பாடப்படாத காரணத்தால், கவிஞன் தான் பெற்ற உணர்ச்சியைத் தன் குரல், ஒலி வேறுபாடுகளின் உதவி கொண்டு கேட்போரை அடையச் செய்ய (Լpւգ-եւյո Յil. எழுத்தில் வடிக்கப் பெற்ற இலக்கியக் காப்பியத்தில் ஆசிரியன் கையாளும் சொற்கள் (சொற்றொடர்கள்) என்பவை ஒசையாலும், அச்சொல் பெற்றுள்ள 337m; Li QLTCŞartsgyth (Semantic meaning) பொருளை விளக்குவதுடன் நின்று விடுவ தில்லை. பலவிடங்களில் முதன் முறை அல்லது இரண்டாம் முறை படிக்கின்ற பொழுது மறைந்து கிடக்கும் பொருள் மூன்று அல்லது நான்காம் முறை படிக்கும் பொழுது வெளிப்படுமாறு சொற்களை அமைக் கின்றான். மறைந்து நின்று வெளிப்படும் இப்பொருள் தவிரக் குறிப்பால் பொருளுணர்த்தும் இயல்புடைய சொற்களைக் குறிப்பிட்ட முறையில் அடுக்கு முகமாகவும் ஆசிரியன் காப்பியத்தை நடத்திச் செல்கிறான். இவ்வகையில் பொருள் கொள்ளும் முறையைத் தொல் காப்பியரே நன்கு அறிந்து 'இறைச்சிதானே பொருள் புறத்ததுவே 'இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே, திறத்தியல் மருங்கின் தெரியுமோர்க்கே '