பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 0 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு கட்டத் தேவை இல்லை என்று கூறும் கருத்தும் திறனாய்வில் உண்டாயினும் அந்தக் கற்பனை மனத்தில் ஒரு நிறைவை, அமைதியை உண்டாக்கல் வேண்டும். உதாரணமாக ஒன்றைக் காணலாம். ஆறு வளஞ்சுரந்து பயிர்களை வாழ வைத்தலின் தாய் என்று போற்றப்படுவதில் தவறு இல்லை. பொதுவாகத் தாய்போன்றது என்று கூறி விட்டால் யாரும் குறை கூறல் இயலாது. இன்னுஞ் சற்று நுண்மை யாகவும் விளக்கமாகவும் இதனை வளர்த்துக் கூறவேண்டும் என்ற கருத்தில் கம்பநாடன், 'சரயு என்பது தாய் முலை அன்னது இவ் உரவுநீர் நிலைத்து ஒங்கும் உயிர்க்கெலாம். ' என்று பாடும்பொழுது இக் கற்பனை ஓரளவு பொருத்தமின்மை யைப் பெற்றுவிடுகிறது. சரயு என்பது ஜீவ நதியாய் ஆண்டு முழுவதும் நீரோட்டம் உடையதாய் இருப்பதால் தாய் முலை உவமை சரிப்பட்டு வரவில்லை. தாய் முலை எப்பொழுதும் பால் வடிந்து கொண்டே இருக்கும் உறுப்பன்று. எனவே பயனுவமம் என்று இதனைக் கொண்டாலும் ஒருபுடை ஒத்துப் பலபுடை ஒவ்வாதிருப்பதே உவமம் என்று கொண்டாலும் இதிலுள்ள குறைபாடு போய்விடுவதில்லை. இந்தக் கற்பனையின் சிறப்பை அறிந்து இதனை எடுத்துக் கொண்டு அதே நேரத்தில் இதிலுள்ள குறையைப் போக்கி இதனையே பயன்படுத்துகின்றார் சேக்கிழார். சரயுவைப் போல ஆண்டு முழுவதும் நீரோட்டமில்லாமல், வேண்டும்பொழுது நீர் தருகின்ற பாலாற்றை வருணிக்க எடுத்துக் கொள்கிறார் சேக்கிழார். 'பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல் மள்ளர் வேனிலில் மணல்திடர் பிசைந்துகை வருட வெள்ள நீர் இரு மருங்குகால் வழிமிதந்தேறிப் பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி' l என்ற பாடலில் பிள்ளை விரும்பி வாய் வைத்துக் குடிக்கத் தொடங்கியவுடன் தாய் முலை பால் தருவதுபோல மள்ளர்கள் மணல் திட்டுக்களைப் பறிக்கும்பொழுது நீர் சுரந்து வருகிற இயல்புடையது பாலாறு என்று கூறும்பொழுது கற்பனையில் ஒன்றும் இடிபாடு இல்லாமல் வருவதைக் காணமுடிகின்றது. ஏனைய காப்பியக் கவிஞர்கள் போலவே சேக்கிழாரும் நால்வகை நிலங்களையும் வருணித்துப் பாடும் இயல்பினர்