பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 6 9 I என்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் அந்த நிலங்களின் இயல்பை வருணிக்கும் அதேநேரத்தில் அந்த நிலத்திலுள்ள சிவன் கோவிலையும் இணைத்துப் பாடுவதில் அவருடைய தனிச் ಶ್ಗ காணமுடிகின்றது. முல்லை நிலத்தை வருணித்து ட்டு, 'மங்கை யர்க்குவாள் விழியிணைதோற்ற மான் குலங்கள் எங்கும்; மற்றவர் இடைக்கிடை மலர்க்கொடி எங்கும்; தங்கள் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்தொழும் சிவன்மகிழ் திருமுல்லைவாயில் ' என்று பாடுவதும் புதுமை. மருத நிலத்தை வருணித்துவிட்டு இரண்டு பாடல்களில் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் கவிஞர். மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறாம் பொருவில் கோயிலும் சூழ்ந்தது அப்பூம்பனை மருதம்' ‘விரும்பு மேன்மை என்பகர்வது? விரிதிரை நதிகள் அருங்கரைப்பயில் சிவாலயம் அநேகமும் அணைந்து பருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாதுர் மருங்கு சூழ்தவம் புரிந்த தன்றோ மற்றம் மருதம் ' என்ற இப்பாடல்களில் மருதம் பாதுரில் சூழநின்று இறைவனை நோக்கித் தவம் செய்கின்றது என்று கூறுவது முற்றிலும் பொருத்தமான கற்பனையேயாகும். வயல்களில் உள்ள நெல்லும் கரும்பும் ஒரளவுவரை தலை தூக்கி நிற்பதும், பின்னர்த் தலை வளைந்து நிற்பதும் தவஞ் செய்பவர்களை நினைவூட்டும் முறையில் இருத்தல் கண்கூடு. இதே மருதத்தை அரசனாகக் கற்பித்து அவன் கொலுவீற்றிருப்பதாகக் கற்பனை செய்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பநாடன், - 'தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண்விழித்து நோக்கத் தெண்திரை எழினிகாட்ட, தேம்பிழி மகரயாழின் வண்டுகள் இனிதுபாட மருதம்விற் றிருக்குமாதோ " என்று பாடும்ப்ொழுது இராமன் தோன்றப் போகும் நாட்டு வருணனை பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்துவிடுகின்றது. ஆனால் தமிழகத்திலுள்ள நால்வகை நிலத்திலும் தோன்றி வாழ்ந்த தொண்டர்கள்பற்றியும், அவர்களுடைய சிவபக்தி