பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 பெரியபுராணம் - ஒர் ஆய்வு பற்றியும் காப்பியத்தில் கூறப்போகும் சேக்கிழார் அந்த இயற்கையை வருணிக்கும்போதுங்கூட சிவன் உறையுங்கோவில் களையும் உடன்சேர்த்துக் கூறுவது முற்றிலும் பொருத்தமானதே யாகும். கற்பனை என்று செய்யும்பொழுதுகூடத் தாம் காப்பியத்தின் தனித்தன்மையை மறவாமல் பாடுவது இவருடைய இயல்பாகும். வைதிக மார்க்கத்தையும், இந்த நாட்டு அன்பு வழிபாட்டையும் இணைத்து ஒருமைப்பாட்டைக் காட்டவந்த திருஞான சம்பந்தர் பிறந்த ஊரைக் கூறவந்த கவிஞர் அதற்கேற்ற முறையில் வருணனை செய்யப் புகுகின்றார். வைதிக நெறியையும், வேதங் களையும், அவற்றில் கூறப்பெற்ற வேள்விகளையும் புறம்பு என்று ஒதுக்கியதோடல்லாமல் சைனரும், பெளத்தரும் இறைவன் ஒருவன் உண்டு என்பதைக்கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆவர். அவர்களுடைய செல்வாக்கு அரசியல் ஆதரவைப் பெற்று ஓங்கி வளர்ந்திருந்த நேரத்தில் தோன்றியவர் ஆளுடைய பிள்ளையார். அவர் வேள்விகளையும் இந் நாட்டு அன்பு மார்க்கத்தையும் ஒருங்கிணைத்து ஒரு புது வழியைக் கண்டவர். எனவே அவர் பிறந்த ஊரைக் கூறவந்த கவிஞர் தம் வருணனை யிலேயேகூட இதனைப் புகுத்துகின்றார், மாமரங்களில் பழுத்த கனிகளிலிருந்து ஒழுகும் சாறு மாவிலை மூலம் ஒழுகி அடியில் உள்ள வயலில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர் மேல் விழுகின்ற காட்சியை எடுத்துக் கூறுவதுடன் அமையாமல் சீர்காழிப்பதியில் மரங்களும் ஆகுதி வேட்கின்றன என்று பாடு கிறார் கவிஞர். 'பரந்தவிளை வயல் செய்ய பங்கயமாம் பொங்கெரியில் வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய் நிரந்தரம் நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர் மரங்களும் ஆகுதி வேட்கும் தகையவென மணந்துளதால் ' என்ற பாடற் கற்பனை அவர் காப்பியத்துக்கேற்ற கற்பனை யாகும். கிளிகளும், மைனாப் பறவைகளும் பேசும் இயல்புடையவை என்பதை அனைவரும் அறிவர். அவை என்ன பேசின என்று கூறுவது அந்த அந்தக் கவிஞர்களின் கற்பனைக்கு விடப்பட்ட செய்தியாகும். திருவாரூர் பற்றிக் கூற வந்த கவிஞர் 'உள்ளம் ஆர்.உரு காதவர் ஊர்விடை வள்ள் லார்திரு ஆரூர் மருங்கெலாம்