பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 3 புலமை நயம் தெள்ளும் ஒசைத் திருப்பதி கங்கள்.பைங் கிள்ளை பாடுவ: கேட்பன பூவைகள் 20 என்று பாடுவது அவருடைய தனிச் சிறப்பை அறிவிப்பதாகும். திருவாரூரிலுள்ள தெருக்களுக்கு வேறு எந்த ஊரின் தெருக்களுக் கும் இல்லாத சிறப்பு ஒன்று உண்டு என்று கூறவரும் கவிஞர், 'படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய் நடந்த செந்தா மரையடி நாறுமால் ' என்று பாடும்பொழுது தம் கற்பனைக்கு வடிவு கொடுப்பதுடன் நின்று விடவில்லை. ஏனமும் அன்னமும் இன்னும் தேடிக் கொண்டிருக்கவும் ஒர் அடியாருக்காகத் துது சென்று தெருவில் நடந்த அவன் திருவடியின் மணம் அங்கு வீசுகிறது என்று கூறுவதால் இறைவன் அடியார்க்கு எளியன் என்ற அவனுடைய எளிவந்த தன்மையையும் (செளலப்பியம்) போகிற போக்கில் குறித்துச் செல்வது சேக்கிழாருக்கே உரிய சிறப்பாகும். இயல்பு நவிற்சிக்குச் சிறப்பிடம் தந்து பாடுபவர் என்பதைப் பலவிடங் களிலும் காணமுடிகின்றது. அரசர்கள் தலைநகராக விளங்கிய காஞ்சி, மதுரை, கருவூர் என்பவற்றைப் பாடும்பொழுது செய்யும் கற்பனைகளைத் திருநாளைப் போவார் ஊரையும், திண்ணனார் பிறந்த ஊரையும் பேசும்பொழுது, தூரத்தே ஒதுக்கிவிட்டு உள்ளவாறு பாடுதலைக் காணமுடிகின்றது. மூர்த்தி நாயனார் புராணத்தில் மதுரையின் சிறப்பைப் பாடுவதைக் காணலாம். 'மைவைத்த சோலை மலயந்தர வந்த மந்த மெய்வைத்த காலுந்தரும்; ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ் செய்ஈரம்' 'மும்மைப் புவனங்களின் மிக்கதன்றே அம்மூதூர் மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவாலவாயில் எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்ததென்றால்' என்று பாடும் இக் கவிஞர் நின்றசீர் நெடுமாறனைப் பற்றிக் கூறுகையில் இக் கருத்தைக் கூறவில்லை. அவன் சமணனாக இருந்தமையின் கூறாமல் விட்டார் என நினைய வேண்டியுள்ளது. அடுத்து இவர் அமைச்சுத் தொழில் பூண்ட சோழர் தலைநகரத் தைப் பாடும்பொழுது தனிச் சிறப்புடன் பாடுவதைக் காணலாம். 22