பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 9.4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கருவூர் சோழர்களுடைய இரண்டாம் தலைநகராக இருந்தாலும் அவ்வூரைப்பற்றிக் கூறவந்த கவிஞர் 'மாமதில் மஞ்சு சூழும்; மாளிகை நிறைவிண் சூழும் து மணி வாயில் சூழும்; சோலையில் வாசஞ் சூழும் தேமலர் அளகஞ் சூழும்; சிலமதி தெருவிற் சூழும் தாமகிழ்ந் தமரர் சூழும் சதமகன் நகரம் தாழ 'கடகரி துறையி லாடும்; களிமயில் புறவிலாடும் சுடர்மணி அரங்கிலாடும்; அரிவையர் குழல் வண்டாடும் படரொளி மறுகிலாடும்; பயில் கொடி கதிர் மீதாடும் தடநெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் ' என்று பாடுகிறார். பல்லவர் தலைநகராகிய காஞ்சியையும், சேரர் தலை நகராகிய கொடுங்கோளுரையும் வருணிக்கப் புகுந்த கவிஞர் ஒலிக் குறிப்பினாலேயே அவற்றின் பெருமையை வெளிப்படுத்து கிறார். 'காலை எழும்பல் கலையினொலி களிற்றுக் கன்று வடிக்குமொலி சோலை எழுமென் சுரும்பினொலி, துரகச் செருக்காற் சுலவுமொலி பாலை விபஞ்சி பயிலுமொலி, பாடல் ஆடல் முழவினொலி வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஒங்கும் வியப்பினதால் ' என்ற பாடலால் சேரர் தலைநகரையும், 'தேரொலிக்க மாவொலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க்காஞ்சி ' என்றும் 'முகிலுரிஞ்சுங் கொடி தொடுத்த முடியவாகும் முழுப் பளிங்கின் மாளிகைகள் முற்றுஞ் சுற்றும் " என்றும், "பூமகளுக்கு உறையுள் எனுந்தகையவான பொன்மாடத்து அரமியங்கள் பொலிய நின்று ' என்றும், - 'இமம்மலிய எடுத்தநெடு வரைகள்போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்