பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 695 சிமையடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவரிய தூய்மையினால் அவற்றுட் சேர்த்து...' " என்றும் காஞ்சியையும் விளக்கஞ் செய்கின்றார். சோணாட்டில் அடியார்கள் பலருஞ் தோன்றினர் என்பதாலும், சிவத்தலங்கள் நிரம்ப உள்ளன என்பதாலும் அந் நாட்டில் பற்றுக் கொண்டு பாடுகின்றார் என்பது உண்மைதான். என்றாலும் சேக்கிழார் தோன்றிய பகுதி தொண்டை நாடாகும். அத் தொண்டை நாட்டையும் அதன் தலைநகரான காஞ்சியை யும் அவர் அன்பு கொண்டு வருணிக்கும் அளவு வேறு எந்த நாட்டையும் ஊரையும் வருணிக்கவில்லை என்பது தெளிவாகும். திருக்குறிப்புத் தொண்டர் என்ற ஏகாலியார் பிறந்த காஞ்சியை யும் தொண்டை நாட்டையும் 112 பாடல்களில் ஈடு இணையற்ற முறையில் வருணனை செய்கிறார் கவிஞர். ' மேட்டுக் குடியினரை வருணிப்பதைக் காட்டிலும் ஏழைகளை வருணிப்பதில் நாட்டம் அதிகம் அரசருடைய ஊர் என்ற முறையில் வருணிக்கப்படும் இம்முறை தவிரச் சாதாரண ஊர்களை வருணிப்பதையுங் காணலாம். திண்ணனார் பிறந்த உடுப்பூரையும், வேடர் தலைவனான நாகன் வாழ்ந்த இடத்தையும் கவிஞர் அப்படியே கூறுவது இயல்பு நவிற்சியாம். 'இத்திரு நாடு தன்னில் இவர்திருப் பதியாது என்னில் நித்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர் மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்தொடர் வேலிகோலி ஒத்தபேர் அரனஞ்சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும் குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த வன்திரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் " என்ற இந்தப் பாடல்களைவிட இவ்விடத்தை இயல்பாக வருணிப்பது இயலாத காரியம். - திருநாளைப் போவார் இருப்பிடத்தை இயல்பு நவிற்சியில் புனைந்தவர். அடுத்துத் திருநாளைப் போவார் என்ற அரிசனத் தொண் டரைப் பாட வரும் கவிஞர் அவர் வாழ்ந்த ஆதனூர்ச் சேரியை 46 .