பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு வருணிக்கும் திறம் அவருக்கே உரியதாகும். இச் சரிதத்தில் ஆதனுர் பற்றி வருணனை ஐந்து பாடல்களில் இடம் பெறுகின்றது. இயற்கை வளம் கொழிக்கும் சிறப்புடையது ஆதனூர் எனக் கூறவந்த கவிஞர் நான்கு பாடல்களில் அவ்வூரின் நன்செய் வளங் கூறிவிட்டு, 'வயல்வளமும் செயல்படுபைந் துடவையிடை வருவளமும் வயலிடம் எங்கணும் நிறைய மிக்க பெருந் திருவினவாம் புயலடையும் மாடங்கள் பொலிவெய்த மலிவுடைத்தாய் அயலிடைவே றடி நெருங்கக் குடிநெருங்கி உளதவ்வூர் 3 i என்ற பாடலில் புயலடையும் மாடங்கள் மலிவுடையனவாக நிரம்பியிருந்தன என முடிக்கின்றார். ஆதனுர் என்ற ஊரின் மேட்டுக் குடிமக்கள் வாழும் பகுதியின் வருணனையாகும் இப் பாடல்கள். அதே ஊரில் ஏழை மக்கள் வாழும் பகுதியையும் புலைப்பாடியையும் இதோ வருணிக்கின்றார். - மற்றவ்வூர்ப் புறம்பனையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளைதுவன்றிப் பற்றியபைங் கொடிச் சுரைமேல் படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துளதோர் புலைப்பாடி. 'கூருகிர் மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில்முன் றினில்நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ் கார் இரும்பின் சரி செறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென் குரைப்படக்கும் அரைக்கசைத்த இருப்புமணி' 'வன்சிறுதோல் மிசையுழத்தி மகவுறக்கும் நிழல்மருதும் தன்சிறைமென் பெடையொடுங்கும் தடங்குழிசிப்புதை நீழல் மென்சினைய வஞ்சிகளும் விசிப்பறைதுங் கினமாவும் புன்றலை நாய்ப்புனிற்று முழைப் புடைத்தெங்கும் - உடைத்தெங்கும் ' என்று இந்த மூன்று பாடல்களும் சேரி வருணனையாகும். நந்தனார் வரலாறு கூறவந்தவருக்கு இந்தச் சேரியை வருணிக்க வேண்டிய தேவை உண்டே தவிர, இதற்கு முன்னர் ஐந்து பாடல் களில் ஊரின் வளத்தைக் கூறவேண்டிய தேவையே இல்லை. அப்படியானால் இக் கவிஞர் இந்த இரண்டு வருணனைகளையும் அடுத்தடுத்துப் பாடுவதன் நோக்கம் யாதாக இருக்கும் என்று சிந்திப்பதில் தவறு இல்லை. தொண்டர்கள், அடியார்கள் என்பவர்கள் தோன்றுவதற்கு எவ்விதமான இடமும், சூழலும் பொருளாதார நிலையும் தேவை இல்லை என்பதை வலியுறுத்திக்