பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 697 காட்டுவதற்குத்தான் இவ்வாறு பாடுகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. புயலடையும் மாடங்கள் பலவிருந்தும் ஆதனூரில் ஒரு தொண்டர் தோன்றுவதற்கு அவை பயன்படவில்லை. சுரை படர்ந்த பழங்கூரையுடைய புல் குரம்பையில் தொண்டர் தோன்றுகிறார். இவ்வாறு கூறுவதால் செல்வமுடைய இடத்தில் தொண்டர் தோன்றமாட்டார் என்று கருதுவதும் தவறு. அரண்மனையில் புகழ்ச்சோழர் தோன்றுகிறார். சாதாரண மக்களுள் ஒருவராக வாழ்ந்த சேரமான் பெருமாளும், மூர்த்தியாரும் அரசராக ஆகின்றனர். என்றாலும் அவர்கள் தொண்டர்கள் என்பதை மறத்தலாகாது. தொண்டர் அரசராகப் பிறப்பதும், அரசராக ஆவதும், சேரியில் பிறப்பதும் இடைப்பிறவரல்களே தவிர அவர்கள் பிறக்கும் குடி அவர்களை ஒன்றுஞ் செய்வதில்லை என்பதைக் காட்டவே கவிஞர் திருநாளைப் போவார் புராணத்தில் இந்ந இரண்டுவகை வாழ்க்கையையும் அடுத்தடுத்து வைத்துக் காட்டுகிறார். தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டியல்பு நாட்டையும், ஊரையும் இயற்கையையும் இத்துணைச் சிறப்புடன் வருணித்துவிட்டால் மட்டும் போதுமா? இந்த ஊரும் நாடும் யாரால் சிறப்படைகின்றன? எனவே இந்த வருணனை யிலேயே மக்கள் வாழ்க்கையையும் காட்டிச் சென்றால் ஒழிய இவை பயனற்றவையாக ஆகிவிடும். இதனை நன்குணர்ந்த கவிஞர் தவறாமல் அந்தந்த நிலையில் வாழும் ஊர் மக்களையும் வருணித்துச் செல்வதைக் காணலாம். மக்கள் எப்பொழுது அமைதியாக வாழமுடியும்? தமக்கு உள்ளதை வைத்துக்கொண்டு வேறு எதற்கும் ஆசைப்படாமல் வாழ முற்பட்டால்தானே அமைதி கிட்டும்? எனவே போதுமென்ற மனம் உடையவராய், தத்தமக்கு வகுக்கப் பெற்ற கடமைகளை முழுத் திருப்தியுடன் செய்பவர்களாய் உள்ள மக்கள் மனத்தில் பொறாமை முதலிய குற்றங்கள் தோன்ற இடமில்லை. இந்தகைய மக்கள் நானிலங் களும் சிறந்து விளங்கும் தொண்டை நாட்டில் மிகுந்து வாழ்கின் றனர் எனக் கூறவரும் கவிஞர், - ஆயநானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித் தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்வாழ் தொண்டை நாட்டியல்பு சொல் . 毅 வரைத்தோ: '