பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்று பாடுவதன் மூலம் ஒரு சமுதாயம் முழுவதையும் எடை போட்டு விடுகிறார். மனிதர்கள் வாழ்வில் தீமை செய்யாவிடினும், நினைவிற்கூடத் தீய எண்ணம் இல்லாமல் இருத்தல் ஏறத்தாழ இயலாத காரியம். ஆனால் அதுவும் இயலும்! எப்பொழுது? இத் தீயவை தோன்று தற்கு நிலைக்களமாக உள்ள மனம் அமைதியற்று, செய்யும் பணியில் விருப்பம் அற்று இருக்குமேயானால் தீமைகள் தோன்று வது இயல்பேயாகும். அவ்வாறு இல்லாமல் தத்தமக்கு அடுத்த செய்தொழிலை அமைதியுடன் செய்தலினாலும் ஆசை இன்மை யினாலும் தீய என்பன கனவிலுங் கருதாத தூய்மை யுடையராய் இருந்தனர் என்று கவிஞர் கூறுவது தருக்க முறைப்படி பொருத்த மானதாகும். தீய என்பவற்றை கனவிலுங் கருதாமல் மன அமைதியுடன் வாழ்பவர்களைச் சமதிருஷ்டி உடையவர்கள் என்று கூறுவர். அப்படிப்பட்ட மக்கள் தொண்டை நாட்டில் வாழ்கிறார்கள் என்று ஏன் கவிஞர் கூறவேண்டும்? சோழ நாட்டில் வாழ்வதாகக் கூறியிருக்கலாமே? அன்றி வேறு எந்தப் பகுதியிலாவது இத்தகைய மக்கள் உள்ளனர் என்று கூறாமல் தொண்டை நாட்டைத் தேர்ந்தெடுத்துக் கூறியது ஏன்? தாம் பிறந்த நாடு என்பதால் சேக்கிழார் இவ்வாறு கூறுகிறாரா? ஆழ்ந்து நோக்கினால் உண்மை விளங்காமற் போகாது. அறம் வளர் நாயகி அர்ச்சனை புரிந்த நகர் சமதிருஷ்டி உடையவர்கள் விரைவில் வீடுபேற்றை அடையக் கூடிய தகுதி பெற்றவர்களாவார்கள். யான், எனது என்ற அகப்புறப் பற்றுக்களை நீக்கி அவற்றின் விளைவாகத் தோன்றும் அறுவகைக் குற்றங்களையும் நீக்கியவர்கட்கு வையத்தினும் வானம் நெருங்கி உள்ளதாகும் எனப் பெரியோர் கூறுவர். இந்தத் தொண்டை நாட்டில், அதன் தலைநகரான காஞ்சியம்பதியில் அண்டகோடிகள் அனைத்தையும் ஈன்று புரக்கும் அன்னை மானுட வடிவுடன் வந்து இறைவனைப் பூசனை புரியப்போகி றாள். இத்துணைப் பெரிய உலகில் தான் வந்து பூசனை புரியத் தகுந்த இடமாக உலகின்றவள் இந்தக் காஞ்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் அதற்குரிய தகுதி அந்நாட்டிற்கு இருத்தல் வேண்டும் அல்லவா? அவ்வாறு இருக்கிறது என்பதைக் குறிப் பிட்டுக்காட்டவே கவிஞர் இவ்வாறு கூறுகிறார். இதற்கு அடுத்த இரண்டாவது பாடலிலேயே, 'ஆன தொல்நகர் அம்பிகை தம்பெருமானை மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட்டு