பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 6 99 ஊனமில் அறம் அநேகமும் உலகுய்ய வைத்த மேன்மை பூண்ட அப் பெருமையை அறிந்தவா விளம்பில் ' என்று கூறுகிறார் ஆகலின் இக் கற்பனை பொருத்தம் என உணர முடிகின்றது. சோழ நாட்டை வருணிக்கையிலும் கவிஞர் மக்களை மறக்க வில்லை என்பதைக் காண முடிகின்றது. 'விதிகள் விழவின் ஆர்ப்பும், விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா; தனையரும் மனையில் தப்பார் நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளும் மாவும் ஒதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணிவரத்தாம் அஞ்சும் ' என்று பாடுகையில் மக்கள் வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது என்பதைச் சுட்டிச் செல்கின்றார். பரத்தையர் வீதியையும் பக்தி நலத்துடன் விவரிப்பவர் பல்வேறு மக்கள் வாழும் தெருக்களை வருணிக்கும்பொழுது பரத்தையர் வீதியையும் வருணித்தல் பண்டைய மரபாகும். தொல்காப்பியம் மருதத் திணையை ஏற்றுக் கொண்டு அதற்கும் இலக்கணம் வகுத்துவிட்ட பின்பு பரத்தையரை ஒதுக்குதல் சரி யன்று எனக் கவிஞர்கள் கருதினர்போலும் திருக்குறள் எவ்வளவு நீதிகளை எடுத்தியம்பிய போதிலும், சிலம்பு முதல் சூளாமணி வரைப் பரத்தையரைப் பாடித்தான் செல்கின்றன. கம்பன் மட்டும் இதற்கு விலக்காகப் பரத்தையர்பற்றிப் பாடாதொழிகிறான். பக்தி இலக்கியமான பெரியபுராணத்தைப் பாட வந்த சேக்கிழார் பரத்தையர் பற்றிப் பாடாமல் விட்டிருப்பார் என்பதில் ஐய மில்லை. ஆனால் அவருடைய காப்பியத்தில் தலையாய இடம் பெறும் நம்பியாரூரர் பரத்தையர் இனத்தில் பிறந்த பரவை யாரை மணந்து கொண்டு திருவாரூரில் நீண்ட காலம் இல்லறம் நடத்தினார் என்பது வரலாறு. ஆகலின் சேக்கிழார் இதனை விட்டுப் போகவும் முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் பரவை யார் பரத்தையர் குடியிற் பிறந்தார் என்பதையே காரணமாகக் கூறி அவ்வினம் ஒதுக்குதற்குரியதன்று என்று குறிப்பாகக் கூறுகிறார். திருவாரூர் தெருக்களைக் கூறவந்த சேக்கிழார், 'மாடமாளிகை, சூளிகை, மண்டபம் கூட சாலைகள், கோபுரம், தெற்றிகள் நீடு சாளர நீடரங்கு எங்கனும் ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன.'