பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 + பெரியபுராணம்- ஓர் ஆய்வு தன்மான உணர்வுக்கு இழுக்காயினும், இராமன் முனிவர்கள் பலரின் துயரைத் துடைக்கவே முக்கியமாக இராவணனிடம் போரிட்டான் என்றுதான் இந்நாட்டுப் பழைய காப்பியங்கள் பேசலாயின. தமிழ் நாட்டில் பெரியபுராணம் தவிர, இத் தமிழ் மண்ணில் தோன்றியவர்கள் பற்றிய காப்பியம் எதுவும் தோன்றா மையின் இக் கருத்தை ஆய வழி இல்லை. சிலம்பில்போர் பற்றிய பேச்சுக்கு இடம் இல்லை. செங்குட்டுவன் கல் எடுக்கப் போனபொழுது போர் இடைப்பிறவரலாகவே பேசப்பெறுகிறது. எனவே தனிமனித வீர வெளிப்பாட்டுக்கு இங்கு காப்பிய உதாரணம் இல்லை. இலக்கியக் காப்பியம் போற்றும் வீரம் தொடக்க நிலைக் காப்பியம் போற்றிய உடல் வீரத்தை மட்டும் குறிப்பிடவில்லை. இலக்கியக் காப்பியம் தோன்றுங் காலத்தில் சமுதாயம் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டு பன்னூறு ஆண்டுகளாகிவிட்டன. போர் முதலியன இந்த நிலையிலும் நடைபெற்றாலும் அது தனிமனிதனுடைய வீரத்தை வெளிப்படுத்துவதற்காகப் பயன் படுத்தப்படவில்லை. வகுத்து வரையறை செய்யப்பெற்ற சமுதாயத்தில் தலைவனாக அரசன் வைக்கப்பட்டுள்ளான். எனவே தனிமனித உரிமைகள் பல சமுதாய உரிமைகளின் அடியில் வைக்கப்பட்டுவிட்டன. சமுதாயம் வகுத்த சட்ட திட்டங்கள் தனிமனிதர்களைக் கட்டுப் படுத்தும் நிலை தோன்றி விட்டது . எனவே காப்பியப் பொருளும் மாறுதல் அடையத் தொடங்கிவிட்டது. உடல் வீரம் காட்டுபவர்கள் காப்பிய நாயகர்களாக இருந்த நிலை மாற்றம் உடல் வீரங்காட்டி உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடும் பழைய மனிதர்களின் வீரத்தின் அடிப்படையில் இருந்தது அவர் களின் தன்மான உணர்ச்சியேயாம். வளர்ச்சி பெற்றுவிட்ட சமுதாய வாழ்க்கையில் இத்தனி மனித உணர்ச்சிக்கு அதிகம் இடம் இல்லை. இந்த நிலையில் முகிழ்த்த இலக்கியக் காப்பிய நாயகர்கள் சமுதாயத்துக்காகவும், ஆன்மீக வளர்ச்சிக்காகவும் தியாகங்கள் புரியலாயினர். தனிமனிதன் தனக்கென அமைத்துக் கொண்ட சிறப்பை விட்டுவிட்டுத் தான் வாழும்நாடு, தான் மேற்கொண்ட சமயம் என்பவற்றிற்கும் கடமைப்பட்டவனாக ஆகிவிட்டான். வளர்ந்து விட்ட சமய அறிவும், பெளதிக விஞ்ஞான அறிவும், காலம், படைப்பு என்ற தத்துவங்களின் எதிரே மனிதன் எவ்வளவு அற்பமானவன் என்பதை விளக்கி விட்டன. தன்மான உணர்ச்சியின் அடிப்படையில் ஒற்றையாக நின்று வீரங்காட்டிப் போர் செய்த நிலை போக, வரையறுக்கப்