பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'அங்கு உரைக்குஎன் அளவு? அப் பதியிலார் தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் பங்கி னாள் திருச் சேடி பரவையாம் மங்கையார் அவதாரஞ்செய் மாளிகை ' என்று கூறும் பொழுது ஒரு பெரிய நுண்ணிய கருத்தையும் பெற வைக்கின்றார். தொண்டர்கள் எப்படி உடையார், இல்லார், உயர்சாதி, இழிந்த சாதி என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங் களிலும் பிறக்கின்றார்களோ அப்படியே சமுதாயம் இழித்துப் பேசும் பரத்தையர் குடியிலும் பிறத்தல் உண்டு என்பதைக் குறிப் பாகக் கூறுகிறார். அங்குரைக்கென் அளவு' என்று கூறும் பொழுது ஒர் இனத்தை உயர்ந்தது என்றும் மற்றோர் இனத்தைத் தாழ்ந்தது என்றுங் கூற நாம் யார்? என்ற கருத்துப்படப் பேசுவ தாகத் தெரிகின்றது. சாதி வேறுபாட்டைச் சேக்கிழார் நம்பினார்; இந்த வேறுபாட்டை அவர் ஏற்றுக் கொண்டாலும் அவரவர்கள் தத்தமக்கு விதித்துள்ள கடமைகளைச் செய்வதன் மூலம் உயர்ந்தவர்களாக ஆகிறார்கள் என்ற கருத்தையும் அவர் ஏற்பதாகத் தெரிகின்றது. பாத்திர உரையாடலைக் கூறும்பொழுதேகூட அவற்றின் எண்ண ஓட்டங்களைக் குறிப்பாக விளக்குபவர் மக்கள் பல்வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டவர்களாகலின் அவரவர் ஏற்றுக் கொண்ட பணிகளில் விருப்பு வெறுப்பை அகற்றித் தூய உள்ளத்துடனும் கடமை உணர்ச்சியுடனும் ஈடுபடுவதால்தான் சிறப்படைய முடியும். அத்தகைய நிகழ்ச்சி கள் சிலவற்றையும் சேக்கிழார் காட்டிச் செல்லத் தவறவில்லை. நம்பியாரூரர் ஆதி சைவக் குடியில் பிறந்தவர் என்பதும், நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசரால் வளர்க்கப் பெற்றவர் என்பதும் நாடறிந்த மெய்ம்மைகளாகும். அத்தகைய ஒருவர் ஒரு வழக்கில் சிக்கிக் கொள்கிறார். இந்த வழக்கில் உள்ள புதுமை என்ன வெனில் வாதியான கிழவேதியர் அவ்வூராருக்கும் நம்பியாரூரருக் கும் அறிமுகம் இல்லாத புதியவர். அவ்ர் காட்டும் ஆவணத்தில் அவருடைய ஊர் வெண்ணெய்நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒலைக்குரியவரோ தொண்டு கிழவராக உள்ளார். அந்த ஊரில் பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் எவரும் பார்த்ததுகூட இல்லையெனில் இந்த வாதியானவர் சந்தேகத்துக்குரியவர் என்று கொண்டால் அதில் எதுவும் தவறு கூற வாய்ப்பில்லை. இதன் எதிராகப் பிரதிவாதியான நம்பியாரூரர் ஊரறிந்தவர்.